8வது ஊதியக்குழு.. பென்ஷன் ரூ.57,000 வரை உயருமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் சந்தோஷம்?
சென்னை: 8வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர வாய்ப்புள்ளது. அத்துடன் அவர்கள் பெறும் வீட்டு வாடகைப்படியும் அதிகரிக்கலாம். குறிப்பாக 7-ம் நிலை ஊழியர்களுக்கு, சம்பளத்தை 3 மடங்காக உயர்த்தி கணக்கிட்டால், சில பெரிய நகரங்களில் மாதம் ரூ.40,410 வரை வீட்டு வாடகைப்படி கிடைக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதை பற்றி இங்கே எளிமையாகவும், சுருக்கமாகவும் பார்க்கலாம்.
முதலில் வீட்டு வாடகைப்படி என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். அரசு ஊழியர்கள் வாடகை வீட்டில் வசித்தால், வீட்டின் வாடகைச செலவுக்கு உதவியாக அரசு வழங்கும் தொகைதான் வீட்டு வாடகைப்படி. இந்தத் தொகை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அவர் பணிபுரியும் நகரத்தை பொறுத்து மாறும்.

நகரங்கள் 3 வகையாக பிரிக்கப்படுகின்றன.. இந்த பெரிய நகரங்களுக்கு 30 சதவீதம், அடுத்த வகை நகரங்களுக்கு 20 சதவீதம், சிறிய நகரங்களுக்கு 10 சதவீதம் என்ற அடிப்படையில் தற்போது வீட்டு வாடகைப்படி கணக்கிடப்படுகிறது.
சம்பளம் எவ்வளவு
இப்போது 7-ம் நிலை அரசு ஊழியரின் தற்போதைய அடிப்படை சம்பளம் ரூ.44,900. 8வது ஊதியக்குழுவில் சம்பளத்தை மாற்றிப் புதிய அடிப்படை சம்பளம் நிர்ணயிக்கும் விகிதம் 3 மடங்கு என்று வைத்துக் கொள்வோம். அப்போது ரூ.44,900 என்பது ரூ.1,34,700 ஆக உயரும்.
இந்த ரூ.134700 அடிப்படை சம்பளத்தில் 30 சதவீதத்தை வீட்டு வாடகைப்படியாகக் கணக்கிட்டால், பெரிய நகரங்களில் மாதம் ரூ.40410 கிடைக்கும். 20 சதவீதம் கணக்கிட்டால் ரூ.26,940 கிடைக்கும். 10 சதவீதம் கணக்கிட்டால் ரூ.13470 கிடைக்கும்.
8வது ஊதியக்குழு
அதேபோல் சம்பள உயர்வு 2.5 மடங்கு என்று வைத்துக் கொண்டால், புதிய அடிப்படை சம்பளம் ரூ.1,12,250 ஆக இருக்கும். அப்போது வீட்டு வாடகைப்படி முறையே ரூ.33,675, ரூ.22,450, ரூ.11,225 ஆக இருக்கும்.
2 மடங்கு என்று வைத்துக் கொண்டால் புதிய அடிப்படை சம்பளம் ரூ.89,800 ஆகும். அதில் 30 சதவீதம், 20 சதவீதம், 10 சதவீதம் என கணக்கிட்டால் முறையே ரூ.26,940, ரூ.17,960, ரூ.8,980 வீட்டு வாடகைப்படியாக கிடைக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ரூ.40,410 என்பது தற்போது அரசு அறிவித்துள்ள தொகை அல்ல. சம்பளம் 3 மடங்கு உயர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை வைத்து செய்யப்பட்ட கணக்கு மட்டுமே. உண்மையில் எவ்வளவு சம்பளம் மற்றும் வீட்டு வாடகைப்படி கிடைக்கும் என்பது 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் மத்திய அரசின் இறுதி முடிவுக்குப் பிறகே தெரியும்.
மத்திய அரசு ஊழியர்கள்
இந்த ஊதிய மாற்றத்தை சுமார் 50 முதல் 55 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், சுமார் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். எனவே 8வது ஊதியக்குழுவில் சம்பளம் மட்டுமின்றி வீட்டு வாடகைப்படியும் எவ்வளவு உயரும் என்பதும் மத்திய அரசு ஊழியர்களிடையே முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆக மொத்தம், 8வது ஊதியக்குழு வந்தால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் வீட்டு வாடகைப்படி கணிசமாக உயர வாய்ப்புள்ளது.. ஆனால் ரூ.40410 என்பது இன்னும் உறுதி செய்யப்பட்ட தொகை இல்லை.. இது 3 மடங்கு சம்பள உயர்வு அடிப்படையில் போடப்பட்ட கணக்கு மட்டுமே. அதனால், ஊதியக்குழுவின் பரிந்துரையும், மத்திய அரசின் இறுதி முடிவும் வந்த பிறகே ஊழியர்களுக்கு கிடைக்கும் உண்மையான தொகை தெரியவரும்..
கருத்துக் கேட்பு எப்போது
இதனிடையே, 8வது ஊதியக்குழு அதிகாரிகள் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய 2 நாட்களில் சென்னையில் மத்திய அரசு ஊழியர்கள், ஊழியர் அமைப்புகள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கருத்துகளை கேட்க உள்ளனர்.. சம்பளம், ஓய்வூதியம், படிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து இந்த கூட்டங்களில் விவாதிக்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு நகரங்களிலும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.
ஓய்வூதிய உயர்வும் இந்தக் கூட்டங்களில் முக்கியமாக உள்ளது. 7வது ஊதியக்குழுவில் பயன்படுத்தப்பட்ட 2.57 மடங்கு கணக்கை அடிப்படையாக வைத்து, 7-ம் நிலை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் சுமார் ரூ.22450-ல் இருந்து ரூ.57,000 முதல் ரூ.58,000 வரை உயர வாய்ப்புள்ளதாக கணக்குகள் வெளியாகியுள்ளன. மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதும் சில ஊழியர் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகளின் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் இவை அனைத்தும் கோரிக்கைகள் மற்றும் கணக்கீடுகள் மட்டுமே... இறுதி முடிவு 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகே தெரியும்...!!


Click it and Unblock the Notifications
