9 karat gold: வந்தாச்சு 9 காரட் தங்கம்! ஒரு சவரன் ரூ.32000! 9k, 14k, 18k, 22k, 24k வித்தியாசம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ள 9 காரட் தங்கத்திற்கு ஹால்மார்க் முத்திரையுடன் தரச்சான்றும் வழங்கப்படும். தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில் தற்போது 9 காரட் தங்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை என்ன என்றும் தெரிந்து கொள்ளலாம்.

உக்ரைன் போர், டிரம்பின் நிர்வாக ரீதியான மாற்றங்கள் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து தற்போது 22 காரட் தங்கம், சவரன் ரூ 77 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இதனால் சாமானியர்கள் நகை வாங்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

gold rate 9 karat chennai

சில நேரங்களில் நகையின் விலை குறைந்தாலும் மக்கள் வாங்கும் அளவுக்கு அதிரடியாக குறையவில்லை. இதனால் கடந்த ஜூன் மாதத்தில் தங்கம் விற்பனை 60 சதவீதம் குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஏன் திடீர் அறிமுகம்

இந்த நிலையில்தான் தங்க நகைகளை எளிதில் வாங்கக் கூடியதாக மாற்றுவதற்காக இந்திய அரசு இந்திய தரநிலைகள் பணியகத்தின் (BIS) கீழ் கட்டாய ஹால்மார்க்கிங் முறையின் கீழ் 9 காரட் தங்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

37 சதவீதம் கோல்டு

அதன்படி 9 காரட் தங்கம் சாதாரண மக்கள் வாங்கும் அளவுக்கும் பண்டிகை காலத்திற்கு ஏற்ற வகையிலும் இருக்கும் என்கிறார்கள். 37.5 சதவீதம் தூய தங்கத்தைக் கொண்ட 9 காரட் தங்கம் இப்போது ஹால்மார்க்கிங் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

தரச்சான்று

14K, 18K, 22K, 23K, 24K ஆகிய நகைகளுக்கு மட்டும் தரச்சான்று வழங்கப்பட்டு வந்த நிலையில் 9K நகைகளுக்கும் இனி தரச்சான்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹால்மார்க் முத்திரையை பார்த்து மோசடியில் இருந்து மக்கள் தப்பவும் இது வழிவகை செய்யும்.

24 காரட் வெர்சஸ் 9 காரட் வித்தியாசம்

24 காரட் தங்கத்திற்கும் 9 காரட் தங்கத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதை பார்க்கலாம். 24 காரட் தங்கம் என்பது தூய தங்கம் (99.9 சதவீதம்). இதில் வேறு எந்த உலோகங்களும் சேர்க்க மாட்டார்கள். அதனால் இது விலை உயர்ந்தது. இந்த தங்கங்கள் நாணயங்கள், பார்கள் செய்ய பயன்படுகிறது.

9 காரட் தங்கம்

9 காரட் தங்கத்தில் 37.5 சதவீதம் தூய தங்கம் உள்ளது. மீதி 62.5 சதவீதம் செம்பு, வெள்ளி அல்லது துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்கள் சேர்ப்பார்கள். இதில் மோதிரங்கள் செய்யலாம். இதன் விலை ஒரு கிராம் 4 ஆயிரம், ஒரு சவரன் 32 ஆயிரம் ரூபாய் ஆகும்.

14 காரட் தங்கம்

14 காரட் தங்கத்தில் 58.5 சதவீதம் தங்கம் சேர்க்கப்படும். மீதமுள்ள 41.5 சதவீதம் மற்ற உலோகங்கள் சேர்ப்பார்கள். இது ஒரு கிராம் ரூ 6 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் ரூ ஒரு சவரன் 48 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம்

18 காரட் தங்கத்தில் 75 சதவீதம் சுத்த தங்கம் சேர்க்கப்படும். மீதி 25 சதவீதம் மற்ற உலோகங்கள் சேர்ப்பார்கள். ஒரு கிராம் ரூ 7955-க்கும் ஒரு சவரன் ரூ 63,640-க்கும் விற்பனையாகிறது.

22 காரட் தங்கம்

22 காரட் தங்கத்தில் 91.6 சதவீதம் சுத்த தங்கமும் மீதி 8.4 சதவீதம் மற்ற உலோகங்களும் சேர்ப்பார்கள். இது ஒரு கிராம் ரூ 9,620-க்கும் ஒரு சவரன் ரூ 76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 காரட் தங்கம்

அது போல் 24 காரட் தங்கத்தில் 99.9 சதவீதம் தங்கமும் 0.1 சதவீதம் மற்ற உலோகங்களும் சேர்க்கப்படும். இது ஒரு கிராம் ரூ 10,495-க்கும் ஒரு சவரன் ரூ 83,952-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரவர் வசதிக்கேற்ப தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+