Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் போய் கொண்டிருக்கிறது.. பிரதான கட்சிகள் கூட்டணி உறவுகளை வலுப்படுத்தி கொண்டிருக்கின்றன.. அந்த வகையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரு மாற்று அரசியலை முன்வைத்து களம் காணத் தயாராகி வருவதாக தெரிகிறது.. குறிப்பாக என்டிஏ கூட்டணியில் ஒரு புதிய திட்டம் தற்போது உருவாகி வருகிறதாம்.. இதுகுறித்த பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வலுவான கூட்டாட்சி முறையை உருவாக்க முயற்சி நடைபெறுகிறதாக கூறப்படுகிறது.. இந்த கட்சிகளுடன் தவெகவும் இணைய வாய்ப்பு இருக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பலத்த யூகங்கள் எழுந்துள்ளன.. இந்த மெகா கூட்டணியின் பலம் மற்றும் இடப்பங்கீடு குறித்த கணக்குகள்தான் மிகபெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளன..

NDA Alliance Tamil Nadu

என்டிஏ உத்தேச பிளான்

இந்த உத்தேசத் திட்டத்தின்படி, அதிமுக 90 இடங்களிலும், தமிழக வெற்றிக் கழகம் 60 இடங்களிலும், பாஜக 55 இடங்களிலும், பாமக 25 இடங்களிலும் போட்டியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..

அதாவது மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இந்தக் கட்சிகள் தங்களுக்குள் பலமான தொகுதிகளை பிரித்துக் கொள்வதன் மூலம், ஆளுங்கட்சிக்கு எதிராக ஒரு பெரிய சவாலை முன்வைக்க முடியும் என்ற நம்பிக்கையே இந்த கூட்டணியின் அடிப்படையாக இருக்கிறது.. பல ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவி வரும் இருமுனை போட்டியை உடைத்து, ஒரு பலமான "கூட்டணி ஆட்சி" முறையை மக்கள் முன் வைப்பதே இவர்களின் பிரதான நோக்கமாக பார்க்கப்படுகிறது..

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம் அதிகார பகிர்வு முறையாகும்.. முதல்வராக அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி, அவருக்கு கீழ் 2 துணை முதல்வர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..

2 துணை முதல்வர்கள்

அந்த வகையில், பாஜகவின் நயினார் நாகேந்திரன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பொறுப்பேற்கக்கூடும் என்பது தற்போதைய அரசியல் யூகங்களின் உச்சமாக இருக்கிறது.. சுருக்கமாக சொல்லப்போனால் இது ஒரு கலப்பு ஆட்சி முறையை உருவாக்கும் முயற்சியாகவும், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் ஒரு அரசியல் யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது..

ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராகப் பொறுப்பேற்றாலும், ஆட்சியின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பாஜகவை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் பதவிக்கு முன்னிறுத்தும் யோசனை இருக்கலாம் என சில அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.. அதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக பாஜக தலைமையிலான ஆட்சியை உருவாக்கும் நீண்டகால இலக்கையும் இந்த கூட்டணி வைத்திருக்கலாம் என பேசப்படுகிறது..

அறுவடை செய்யும் பாஜக

அதாவது ஒருபுறம் அதிமுகவின் செல்வாக்கைப் பயன்படுத்தி கொண்டு, மறுபுறம் விஜய் போன்ற இளம் தலைவர்களின் மக்கள் செல்வாக்கை அறுவடை செய்யும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டணி கணக்கு நடைமுறையில் சாத்தியமானால், தமிழக அரசியலில் இது ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக மாறக்கூடும்...

எனினும், இந்த திட்டம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரங்களில் எழுகிறது.. முக்கியமாக முதலமைச்சர் பதவி மாற்றம் போன்ற திட்டங்கள் முன்னரே பேசப்படுவது அதிமுகவுக்குள் அதிருப்தியை உருவாக்குமா என்ற சந்தேகமும் சிலரிடம் இருக்கிறது..

தமிழகத்துக்கு பழக்கமில்லையே?

அதுமட்டுமல்ல, பல ஆண்டுகளாக தனித்து ஆட்சி நடத்தி வந்த கட்சியாக இருக்கும் அதிமுக, அதிகார பகிர்வு முறையை எவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வியாகவே பார்க்கப்படுகிறது.. அதிலும் ரத்தத்தின் ரத்தங்கள் இதை மனதார ஏற்பார்களா தெரியவில்லை.

அதே நேரத்தில், பல கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தும் கூட்டணி முறையானது, நம்முடைய தமிழக அரசியலில் பெரிதாக பழக்கமில்லை... வாக்காளர்கள் இதை ஒரு புதிய அரசியல் முயற்சியாக ஏற்கிறார்களா அல்லது பாரம்பரிய தனிக்கட்சி ஆட்சியையே விரும்புகிறார்களா என்பதும் வரப்போகும் தேர்தல் முடிவுகளில்தான் தெரியவரும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+