நீதிபதிகளில் 90% உயர்சாதி.. ஒரு பழங்குடி கூட வரல! இடஒதுக்கீட்டை கொண்டு வாங்க - திமுக ராஜீவ் காந்தி
சென்னை: உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் நியமிக்கப்படும் நீதிபதிகள் பதவிக்கு இடஒதுக்கீடு வேண்டும் என திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் நியமனம் செய்யப்படும் நீதிபதிகள் பதவிக்கு இட ஒதுக்கீடு வேண்டும்! தற்போது இந்திய உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் "கொலீசியத்தில்" உள்ள நீதியரசர்கள் 5 பேர் அதில் 3 பேர் பிராமணர்கள்!

இது வரை இந்திய வரலாற்றில் ST வகுப்பை சேர்ந்த யாரும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆகியது இல்லை. 1980 ஆண்டு அன்றயை தமிழ்நாட்டின் முதலமைச்சர் கலைஞர் அன்று தனக்கு இருந்த அதிகாரத்தினை பயன்படுத்தி இந்தியாவில் முதல் முறையாக உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக திரு.வரதராஜன் அவர்களை நியமனம் செய்ததன் விளைவு தான் இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற முதல் SC வகுப்பு நீதிபதி வரதராஜன் ஆவார்.
இது வரை 7 பேர் மட்டுமே உச்சநீதிமன்றதில் நீதியரசர்களாக SC வகுப்பை சேர்ந்தோர் ஆகி உள்ளனர். இந்திய நாட்டின் மக்கள் தொகையில் OBC - 60 சதவீதம், SC - 18 சதவீதம், ST - 9 சதவீதம், பிராமனர்கள் - 4.5 சதவீதம், பிராமணர் அல்லாத உயர் சாதிகள் (FC) - 8 சதவீதம். இதுவரை நியமிக்கபட்டுள்ள இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் இதுவரை - 50 பேர்.
OBC - 1, SC - 1, ST - 0, FC - 10, மதச்சிறுபாண்மை - 4, பிராமணர்கள் - 34 க்கு மேல். தற்ப்போது உள்ள இந்திய உச்சநீதிமற்ற நீதியரசர்கள் - 32, OBC - 3, SC - 2, ST - 0, மதச்சிறுபாண்மை - 2, பிராமணர் - 18, பிராமணர் அல்லாத உயர் சாதிகள் (FC) - 7. தற்போது நாடு முழுவதும் 2018 க்கு பின் நியமிக்கபட்டுள்ள உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் - 604.
OBC - 72, SC - 18, ST - 9, மதச்சிறுபான்மை (OBC, SC, ST) - 21, பிராமணர் அல்லாத உயர் சாதிகள் - 187, பிராமணர் - 423 க்கு மேல். உறுதியாக நீதித்துறையில் இட ஓதுக்கீடு வேண்டும். நீதிமன்றங்களின் உத்தரவுக்கு உள் நோக்கம் கற்பிக்க கூடாது என்பது சட்டம். ஆனால் நீதிபதிகள் நியமனம் உள்நோக்கம் கொண்டதாக அமைந்து விட கூடாது!
இந்திய மக்கள் தொகையில் 80% உள்ள OBC, SC, ST மக்கள் இதுவரை முழுமையாக நீதித்துறையில் 10 விழுக்காடு கூட வர முடிவது இல்லை! எது தகுதி? எது நியாயம்? எது உண்மை? அரசியல்வாதி சரியா? சட்டம் சரியா? சாதி சரியா? மதம் சரியா? என சமூகத்தில் சட்டப்படி கேள்வி கேட்கும் நீதியரசர்களில் 90 விழுக்காடு ஓரே சாதியா இருப்பது எப்படி நீதியாக அமையும்?" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications