அடடே.. பாட்டி யாருன்னு ஞாபகம் இருக்குல்ல.. பொங்கல் பரிசுடன், "அதே" க்யூட் பொக்கை சிரிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா நிவாரண தொகையை பெற்ற மகிழ்ச்சியில் பொக்கை வாய் சிரிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த வேலம்மாள் பாட்டி தற்போது கரும்புடன் பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா நிவாரணமாக ரூ 4000 இரு தவணைகளாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடுக்கப்பட்டது. முதல் தவணை பணம் மே மாதம் ஆட்சிக்கு வந்தவுடனேயே வழங்கப்பட்டது.

இரண்டாவது தவணை ரூ 2000 , ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் தொகுப்புடன் ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது. அப்போது ஒரு ரேஷன் கடையில் ரூ 2000 பணத்தையும் மளிகை பொருட்களையும் பெற்ற 90 வயது பாட்டி பெற்று கொண்ட புகைப்படம் வைரலானது.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கால் கையில் பணமில்லாமல் தவித்து வந்த ஏழைகளுக்கு பணத்துடன் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டதால் அந்த பாட்டியின் உள்ளத்தில் இருந்த கவலைகள் போய் தனது பொக்கை வாய் வழியாக அழகான சிரிப்பாக வெளியே வந்தது. இந்த புகைப்படத்தை ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என முதல்வர் ஸ்டாலினும் தனது சமூகவலைதளங்களில் தெரிவித்திருந்தார்.

நாகர்கோவில் வேலம்மாள்

நாகர்கோவில் வேலம்மாள்

இந்த நிலையில் அந்த பாட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த வேலம்மாள் (90) என தெரியவந்தது. இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த பாட்டி அவரது ஊரில் ரூ 2000 மற்றும் ரேஷன் பொருட்களை பெற்ற போது ஜாக்சன் ஹெர்பி என்ற புகைப்பட கலைஞர் அந்த பாட்டியிடம் மெல்ல பேச்சு கொடுத்து வாங்கிய பணத்தை காட்டுமாறு கேட்க, உடனே பாட்டியும் அழகாக காட்ட, அதை அப்படியே கிளிக் செய்துவிட்டார்.

கேரளா

கேரளா

இந்த புகைப்படம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் வைரலானது. இதையடுத்து அந்த புகைப்படக் கலைஞரை வரவழைத்த முதல்வர் ஸ்டாலின் அவரை பாராட்டினார். தற்போது பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு 21 மளிகை பொருட்களும் முழு கரும்பும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

பொக்கை சிரிப்பில் போஸ் கொடுத்த பாட்டி

பொக்கை சிரிப்பில் போஸ் கொடுத்த பாட்டி

இந்த திட்டம் நேற்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கடந்த முறை வைரலான அதே வேலம்மாள் பாட்டி இந்த முறை கரும்பையும் பரிசு தொகுப்பையும் பெற்றுக் கொண்டு ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து அதே பொக்கை சிரிப்பில் வெட்கத்துடன் சிரிக்கும் புகைப்படம் மீண்டும் இணையத்தை "ஆக்கிரமித்துள்ளது".

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+