சென்னையில் காவல் ரோந்துப்பணிக்கு 93 புதிய இன்னோவா கார்கள்! பழசுக்கு புது ஆஃபர் கொடுத்த முதலமைச்சர்!
சென்னை: சென்னையில் காவல் ரோந்துப்பணிக்காக 93 புதிய இன்னோவா கிரிஸ்டா ரக கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
டாடா சுமோ, ஜிப்ஸி, என பழைய வாகனங்களில் ரோந்துப்பணி செய்து வந்த காவலர்களுக்கு இன்னோவா கிரிஸ்டா கார் வழங்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது தொடர்பான விவரம் வருமாறு;

மானியக் கோரிக்கை
2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்துள்ள பழைய ரோந்து வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்றும், சுமார் 10 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வரும் வாகனங்களுக்கு பதிலாக புதிய ரோந்து வாகனங்களும் வாங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

93 இன்னோவா கார்கள்
அதன்படி தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 46 ரோந்து வாகனங்களும், சென்னை பெருநகரில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்திடவும், அவசர ஊர்திகளின் பயன்பாடு மற்றும் மிக முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தினை விரைவுப்படுத்திடவும் சுமார் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய போக்குவரத்து ரோந்து வாகனங்களுக்கு பதிலாக புதிதாக 47 போக்குவரத்து ரோந்து வாகனங்களும் 93 ரோந்து வாகனங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

காவல் பணி
இவ்வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும், போக்குவரத்து காவல் மூலம் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க மிகவும் பயனுள்ளதாக அமைவதுடன் சென்னை பெருநகர காவல் பணி மேன்மேலும் சிறக்க உறுதுணையாக இருக்கும்.

ரூ.14.71 கோடி மதிப்பு
காவல்துறை ரோந்துப்பணிக்காக வாங்கப்பட்டுள்ள 93 இன்னோவா கார்களின் மொத்த மதிப்பு ரூ.14.71 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸார் டயர்கள் தேய்ந்த பழைய ஜிப்ஸிகளில் ரோந்துப்பணி சென்ற காலம் மாறி, இன்னோவா கிரிஸ்டா காரில் சும்மா ஜம்முன்னு உட்கார்ந்து இனி ரோந்துப்பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications