Mahamaham: 2028-ல் கும்பகோணம் மகாமகம்! லட்சக்கணக்கான மக்களுக்கு ரயில்வே துறை குட் நியூஸ்!
சென்னை: கும்பகோணம் ரயில் நிலையம் ரூ 99 கோடியில் மறுசீரமைப்பு செய்தால் 2028ஆம் ஆண்டு மகாமகம் நடைபெறும் போது லட்சக்கணக்கான பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தமிழ் ரயில் செய்திகள் எனும் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கும்பகோணம் ரயில் நிலைய மறுசீரமைப்பு: மகாமகம் 2028-க்கு ஒரு வரப்பிரசாதம்!
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கும்பகோணம் ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி, பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில், பிரம்மாண்டமாக மேற்கொள்ளப்பட உள்ளது. தெற்கு ரயில்வே கட்டுமான அமைப்பு, இந்தத் திட்டத்தை செயல்படுத்த ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது. பயணிகளுக்கான புதிய வசதிகள் இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் கும்பகோணம் ரயில் நிலையத்தில் பின்வரும் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
புதிய கட்டிடம்: பயணிகள் வந்து செல்ல தனித்தனி வசதிகளுடன் கூடிய புதிய ரயில் நிலையக் கட்டிடம் அமைக்கப்படும். கூடுதல் நடைமேடை: பயணிகளின் கூட்ட நெரிசலைக் கையாள ஒரு கூடுதல் நடைமேடை கட்டப்படும்.
மேம்படுத்தப்பட்ட நடைபாதை: ஆறு மீட்டர் அகலமுள்ள புதிய நடைபாதை அமைக்கப்படும். இயக்க வசதிகள்: வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நான்கு லிஃப்ட்கள் மற்றும் நான்கு எஸ்கலேட்டர்கள் நிறுவப்படும்.
பிற மேம்பாடுகள்: வாகனங்கள் நிறுத்தப் போதுமான இடவசதி, நடைமேடை மேம்பாடு மற்றும் ரயில் நிலையத்தைச் சுற்றி அழகிய பசுமைப் பகுதிகள் ஆகியவை உருவாக்கப்படும்.
இந்த மேம்பாட்டுப் பணிகள் மூலம் கும்பகோணம் ரயில் நிலையமானது, திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக நவீனமயமாக்கப்பட்டு, பக்தர்களுக்கான சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கும்பகோணம் மகாமகம் என்பது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு திருவிழா ஆகும். இது மார்ச் மாதம் நடைபெறும். இந்த மகாமக குளத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு மகாமகம் நடைபெற்றது. இதை வடஇந்தியாவில் நடத்தப்படும் கும்பமேளா என சொல்லலாம்.
இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடுவர். இந்த குளத்தில் 20 வகையான தீர்த்தங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், வாயு தீர்த்தம், யமுனை தீர்த்தம், குபேர தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், ஈசான்ய தீர்த்தம், நர்மதை தீர்த்தம், இந்திர தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், அக்னி தீர்த்தம், காவிரி தீர்த்தம், யம தீர்த்தம், குமரி தீர்த்தம், நிருதி தீர்த்தம், பயோஷினி தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், வருண தீர்த்தம், சரயு தீர்த்தம், தேவ தீர்த்தம் ஆகும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications