தீபாவளி அதுவுமா.. கதறி அழுத பெற்றோர்.. துடிதுடித்து பலியான 4 வயது சிறுமி..நொறுங்க வைத்த ராணிப்பேட்டை

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் இந்த சம்பவம் நடந்து உள்ளது. அங்கே பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிக்கொண்டு இருந்த நான்கு வயது சிறுமி வெடி விபத்து காரணமாக பலியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

A 4-year-old girl died due to the blast of crackers in Ranipettai on Diwali

தீபாவளி அதுவுமாக நேற்று நடந்த இந்த சம்பவம் அந்த ஊர் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரமேஷ் - அஸ்வினி ஆகியோரின் மகள் நவிஷ்கா(4) என்ற சிறுமிதான் இந்த வெடி விபத்தில் பலியானதாக கூறப்படுகிறது.

பட்டாசுகள் அடுத்தடுத்து அந்த சிறுமி மீது விழுந்து தீ பிடித்து உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அவர் வெடி வெடித்து விளையாடிக்கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்து உள்ளது. சிறுவர்கள் சிறுமிகள் பலர் சேர்ந்து வெடி வெடித்து கொண்டாடி உள்ளனர்.

விபத்து: இதில் ஒரு வெடி பறந்து வந்து அந்த சிறுமி மீது விழுந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே தீ பிடித்து உடல் கருகி அந்த சிறுமி பலியாகி உள்ளனர். இதையடுத்து உடனே அந்த சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கே தீயில் அந்த சிறுமி துடித்து உள்ளார். உடல் முழுக்க உட்சபட்ச காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

A 4-year-old girl died due to the blast of crackers in Ranipettai on Diwali

ஆனால் அங்கே அவர் பலியாகிவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் இதை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

சிறுமி மரணம் அடைந்தது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றன. செய்யார் அரசு மருத்துவமனைக்கு அந்த சிறுமியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கே சோதனை செய்யப்பட்டது. அதன்பின் மாலையில் அவரின் உடல் பெற்றோர்களிடம் கொடுக்கப்பட்டது

தீபாவளி விபத்துகள்: பட்டாசுகள் காரணமாக சென்னையில் மட்டும் 148 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறை தெரிவித்து உள்ளது. நெறிமுறைகளை மீறி குடிசைப்பகுதிகள் போன்றவற்றுக்கு அருகே பலர் அதிக நேரம் பட்டாசுகளை வெடித்தனர். இதனால் சென்னையில் காற்று 300 ஐ தாண்டி பதிவானது. விதிகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது காவல் துறை வழக்குகளை பதிவு செய்தது.

உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க அனுமதிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கப்படவும், வெடிக்கப்படவும் வேண்டும். உச்சநீதிமன்ற உத்திரவிற்கிணங்க பட்டாசுகள் வெடிக்கும் நேரம் காலை 06.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் இரவு 07.00 மணி முதல் 08.00 மணி வரையிலும் என்று 2 மணி நேரங்கள் ஒதுக்கியுள்ளதால், இந்த நேரத்தில் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

A 4-year-old girl died due to the blast of crackers in Ranipettai on Diwali

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு விதி 89ன்படி பட்டாசு வெடிக்கும் இடத்திலிருந்து 4 மீட்டருக்கு அப்பால் 125 டெசிபல் அளவுக்கு மேல் ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட சீன தயாரிப்பு வெடிகளை விற்பதோ, பயன்படுத்துவதோ (வெடிப்பதோ) கூடாது. பட்டாசுகளை எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் வெடிக்காதீர்கள். இருசக்கர, 3 சக்கர மற்றும் 4 சக்கர மோட்டார் வாகனங்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடங்களின் அருகிலும் பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் பெட்ரோல் நிலையங்கள் அருகிலும் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதை மீறி வெடி வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+