ஒரே நைட்டில்.. வெளியே போனவர் சட்டென உள்ளே வந்துட்டாரே.. அதிமுகவை அதிரடித்த பாஜக.. நடந்தது என்ன?
இவர் மீண்டும் கட்சியில் உறுப்பினராக தொடருவார் என்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வ பால கணபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த தினேஷ் ரோடி மீண்டும் பாஜக கட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அதிமுக - பாஜக இடையில் கடுமையான மோதல்கள் நிலவி வருகின்றன. அதிமுக பாஜக இடையிலான மோதல் அதிகரித்துள்ளதால் எங்கே இவர்கள் கூட்டணி முற்றாக முறிகிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சமீபத்தில் பாஜக நிர்மல் குமார் உள்ளிட்ட பலர் அதிமுகவிற்கு தாவியதால் பாஜகவினர் கடுப்பில் உள்ளனர். அண்ணாமலை உள்ளிட்டோர் நேரடியாக அதிமுகவை விமர்சனம் செய்துள்ளனர்.

மோதல்
அமர் பிரசாத் ரெட்டியும் வெளிப்படையாக தன் அதிருப்தியை அதிமுகவிற்கு எதிராக காட்டி உள்ளார். அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது, பாஜகவினர் அதிமுகவில் இணையும்போது கசக்கிறதா? மத்தியில் ஆளுங்கட்சி என்ற திமிரில் பாஜகவினர் நடந்து கொள்ள கூடாது என்று பாஜகவை பதிலுக்கு செல்லூர் ராஜுவும் விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பதிலடி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி, வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜு. நெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு 'சீட்' வாங்கிக் கொடுங்கப்பா!

அமர் பிரசாத் ரெட்டி
இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.,வுக்கு ஆலோசனை சொல்லுகிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது. அ.தி.மு.க., தொண்டர்கள் கோபப்பட்டால், பா.ஜ. க, தாங்காதுன்னு ஜெயக்குமார் அண்ணன் சொல்லியிருக்காங்க. இந்தக் கோபம் ஈரோடு தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்ட தி.மு.க., மேல வரலையே அண்ணா!, என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த மோதல் கொஞ்சம் எல்லை மீறி சென்றதும் குறிப்பிடத்தக்கது.

உருவப்படம்
முக்கியமாக எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக நிர்வாகி ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவங்களும் கூட நடந்தது. பாஜகவினரை தூக்கிய கோபத்தில் பாஜக தொண்டர் ஒருவர் எடப்பாடி படத்தை எரித்தார். கூட்டணி கட்சிகளுக்கு இடையில் இது மேலும் பிரிவினையை ஏற்படுத்தியது. தினேஷ் ரோடி என்பவர்தான் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்தது. இதையடுத்து சென்னை வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் இவரை நீக்குவதாக அறிவித்தார். 6 மாதங்களுக்கு கட்சியில் இருந்து தற்காலிமாக இவரை நீக்குவதாக அறிவித்தார்.

சேர்ப்பு
இந்த நிலையில் தற்போது தினேஷ் ரோடி மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு உள்ளார். ஒரே இரவில் இவர் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார். இவரின் நீக்கத்தை ரத்து செய்வதாகவும். இவர் மீண்டும் கட்சியில் உறுப்பினராக தொடருவார் என்றும் மாநில பொதுச்செயலாளர் செல்வ பால கணபதி தெரிவித்துள்ளார். ஒரே இரவில் கட்சியில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட நபர்.. மீண்டும் சேர்க்கப்பட்டது ஏன்? பாஜகவின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக இந்த முடிவை எப்படி பார்க்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

குழப்பம்
முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி கருத்து சொன்னார். அதில், எடப்பாடி புகைப்படத்தை எரித்தது தவறுதான். ஒரு தம்பி அவசரப்பட்டு செய்துவிட்டார். அவரை கைதும் செய்துவிட்டனர். அது தவறுதான், . கட்சி தலைவரை விமர்சனம் செய்துவிட்டு கூட்டணி கட்சியிலேயே சேருவது தவறு. ஸ்டாலினை மோசமாக விமர்சனம் செய்துவிட்டு ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைய முடியுமா? திமுகவினர் கொதித்து இருப்பார்களே.. அப்படித்தான் அண்ணாமலையை பேசிவிட்டு அதிமுகவில் எப்படி இணைய முடியும், என்று அமர் பிரசாத் ரெட்டி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications