சென்னைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.. துறைமுகம்- மதுரவாயல் பாலத்தில் இப்போது என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே 21 கிலோமீட்டர், தூரத்திற்கு அமைக்கப்பட்டு வரும் 2 அடுக்கு மேம்பாலம் பணி ரூ.5 ஆயிரத்து 770 கோடியில் நடந்து வருகிறது. அதில் தற்போது 40 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் கூவம் ஆற்றில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக அமைக்கப்பட்டு வரும் ராட்சத தூண்கள் மீது 2 அடுக்கு 'கான்கிரீட் பாக்ட்ஸ்'கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை துறைமுகம்- மதுரவாயல் இடையே ரூ.5 ஆயிரத்து 770 கோடியில் 21 கிலோமீட்டர், தூரத்திற்கு 2 அடுக்கு மேம்பாலம் பணி நடந்து வருகிறது. புதிய 4 வழித்தட 2 அடுக்கு மேம்​பாலப் பணி​கள் முழு​வீச்​சில் நடந்து வரு​கின்​றன. அதில் தற்போது 40 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், கூவம் ஆற்றின் மேல்புறம் 15.5 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த மேம்பாலம் அமைகிறது. சரக்குப் போக்குவரத்தை நகரப் போக்குவரத்திலிருந்து பிரிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் என தெரிகிறது.

A boon for Chennai What is happening now at the Port-Maduravoyal elevated corridor

ஆரம்பத்தில் ஒற்றை அடுக்​காக திட்​ட​மிடப்​பட்ட இப்​பாலம், தமிழக அரசின் கோரிக்​கையை ஏற்​று, 2 அடுக்​காக மாற்​றப்​பட்​டுள்​ளது. உள்​ளூர் நகரப் போக்​கு​வரத்​துக்​காக முதல் அடுக்​கு, சென்னை துறை​முகத்​துக்கு செல்​லும் கனரக சரக்கு வாக​னங்​களுக்​காக பிரத்​யேக​மாக 2-வது அடுக்கு அமைக்​கப்​படு​கிறது.

கனரக சரக்கு வாக​னங்​கள் செல்லும் மேல் அடுக்கு, சென்னை துறைமுகத்திற்குச் சென்று வரும் கொள்கலன் மற்றும் சரக்கு வாகனங்களுக்காக பிரத்தியேகமாக 6 வழிப் பாதையாகச் செயல்பட போகிறது. கீழ் அடுக்கு பொது மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கான 4 வழிச் சாலையாக அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக சென்னை நகரின் முக்​கிய பகு​தி​களில் வாக​னங்​கள் பாலத்​தில் ஏறவும், இறங்​க​வும் வசதி​யாக 13 சாய்​தளங்​கள் அமைக்​கப்​படு​கின்​றன. கோயம்பேடு, சிவானந்தா சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கல்லூரி சாலை வாகனங்கள் ஏறி இறங்குவதற்கான சாய்தளங்கள் அமைக்கப்படுகின்றன.

சிவானந்தா சாலை மற்றும் கல்லூரி சாலை ஆகிய 2 இடங்களில் இந்த மேம்பாலத்தில் நுழைவதற்கும், காமராஜர் சாலை, ஸ்பர்டேங்க் சாலை உட்பட 2 இடங்களில் வெளியேறுவதற்கும் பிரத்தியேகப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. நேப்​பியர் பாலம் பகு​தி​யில் அதிநவீன கேபிள் பாலம் அமைக்​கப்​பட்டு வருகிறது. போக்​கு​வரத்து போலீ​ஸார் அனு​ம​தி​யுடன் பகலில் 5 மணி நேரம், இரவில் 6 மணி நேரம் என தின​மும் 11 மணி நேரம் கட்​டு​மானப் பணி​கள் நடந்து வரு​கின்​றன.

இரட்டை அடுக்கு பாலம் என்றாலும், கோயம்பேடு முதல் மதுரவாயல் வரை மட்டும் இந்தப் பாதை பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் ஒற்றை அடுக்கு மேம்பாலமாகத் தொடரும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது எழும்பூரில் உள்ள கூவம் ஆற்றில் ஒற்றை அடுக்கை தொடர்ந்து 2-வது அடுக்குிற்கு 'கான்கிரீட் பாக்ஸ்' அமைக்கும் பணி தீவிரமாக தீவிரமாக நடக்கிறது. அதேபோல் செம்பரம்பாக்கம் அருகே உள்ள 64 ஏக்கர் பரப்பளவிலான யார்டில், மேம்பாலத்திற்கான பிரம்மாண்ட கான்கிரீட் தூண்கள் மற்றும் 'பாக்ஸ் கார்டர்' தயாரிக்கும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:- இந்த மேம்பாலம் பணிகள் வருகிற 2027-ம் ஆண்டு நவம்பரில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் தற்போது ஒற்றை அடுக்கு முடிந்த பகுதிகளில் 2 அடுக்கு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆரம்பத்தில் தினசரி சுமார் 20 ஆயிரம் உள்ளூர் வாகனங்களையும் 5 ஆயிரத்து 500 கனரக வாகனங்களையும் கையாளும் என்று மதிப்பிடப்பட்டது. போக்குவரத்து கணிப்புகளின்படி, 2047-ம் ஆண்டுக்குள் தினசரி உள்ளூர் வாகனப் பயன்பாடு 52 ஆயிரமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் சென்னை துறைமுகத்தின் ஆண்டுக்கு 20 கோடி டன்கள் சரக்கு கையாளும் திறனைக் கருத்தில் கொண்டும் இந்த வழித்தடம் திட்டமிடப்பட்டிருககிறது. இது வரும் பத்தாண்டுகளில் சரக்கு போக்குவரத்து மற்றும் நகர்ப்புற போக்குவரத்து ஆகிய இரண்டிற்கும் ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக இருக்க போகிறது என அதிகாரிகள் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+