சேகர் பாபுவுக்கு ஒரு விஸ்கி பார்சல்.. "இந்து ஒழிப்பு" அமைச்சர்.. பாஜக பிரமுகரின் டிவீட்டால் சர்ச்சை
சேகர்பாபுவை கிண்டல் செய்து பாஜகவின் எஸ்ஆர் சேகர் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: தளர்வுகளில் டாஸ்மாக் திறக்கப்பட்டும், கோயில்களை இன்னும் திறக்காமல் உள்ளதற்கு பாஜக கேள்வி எழுப்பி வருகிறது.. அந்த வகையில், அக்கட்சியின் பொருளாளர் எஸ்ஆர் சேகர், திமுக அமைச்சர் சேகர்பாபுவின் கருத்தினை கேலி செய்துள்ளார்.
இப்போதுதான் தொற்று மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. அதனால், ஓரளவு தளர்வுகளும் மெல்ல மெல்ல அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன..

விமர்சனங்கள்
இதனால் குடிமகன்கள் குஷியானாலும், பக்தர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.. டாஸ்மாக் திறக்கப்பட்டும், கோயில்களை ஏன் திறக்கவில்லை என்ற கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்தன.. இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு விளக்கமும் தந்திருந்தார்.. அதில், டாஸ்மாக் கடைகள் பொது வெளியில் இருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டத்தை கட்டுப்படுத்த கூடும். ஆனால், கோயில்கள் திறந்தால் பொதுமக்களை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை" என்று கூறியிருந்தார்.

பாஜக
அமைச்சரின் இந்த பதிலுக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்...தமிழக பாஜக பொருளாளர் எஸ்ஆர் சேகர், "இந்த சிறந்த ஆராய்ச்சிக்காக சேகர்பாபுவுக்கு ஒரு பெட்டி "விஸ்கி" அனுப்பி வைக்கப்படுகிறது" என்று கிண்டலாக ட்வீட் போட்டுள்ளார்.. சேகரின் இந்த ட்வீட்டுக்கு பலரும் ஆதரவும் எதிர்ப்பும் என மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர்
"சார், நீங்க அனுப்புறது பத்துமா அவருக்கு? தைரியம் இருந்தா நேர்ல போயி கொடுத்துட்டு வாரும்.. கோயிலை திறக்காக அமைச்சரின் இந்த செயலுக்கு, இந்து அறநிலையத்துறை அமைச்சரா? இந்து ஒழிப்பு அமைச்சரா? நாம தான் ஒன்று கூடி கோவில் முன் நிற்க வேண்டும்... இவங்க கோவிலை திறக்க விட மாட்டாங்க.." என்று ஆதரவு கருத்துக்கள் குவிகின்றன.

சேகர்பாபு
அதேபோல, "கோயிலை புனிதமாக நினைப்பவர் அமைச்சர் சேகர்பாபு.. அங்கே கூட்டமாக போய் எந்த பக்தரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே கோயில் திறப்பதில் அவசரம் காட்டவில்லை... ஆனால் பக்தி போர்வையில் இருக்கும் தங்களை போன்ற ஆசாமிகளுக்கு விஸ்கி ஞாபகம் எந்நேரமும் வந்து கொண்டு தான் இருக்கும் என்பது புரிகிறது" என்று எதிர்ப்பு கருத்துக்களும் விழுகின்றன.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications