பொத்! பிஎஸ்என்எல் ஆபிசில் வந்த சத்தம்! 3வது மாடியிலிருந்து விழுந்த நபர்! புதிரா இருக்கே! கடலூர் ஷாக்
சென்னை: கடலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தின் மாடியில் இருந்து விழுந்து ஊழியர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து பிரதீப் குமார்(50) என்பவர் பலியாகிவிட்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருந்தாலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூரில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்து உள்ளது. மேலே போன் பேசிக்கொண்டு இருந்த போது பிரதீப் குமார் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம், இவர் தெலங்கானாவிற்கு மாறுதலாகி, அங்கு பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அலுவல் ரீதியாக நேற்று அவர் பிஎஸ்என்எல் அலுவலகம் வந்துள்ளார்.
அப்போது 3வது மாடியில் போனில் பேசிக்கொண்டு இருந்தவர் அங்கிருந்து அப்படியே கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம்:
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், திடீரென பிஎஸ்என்எல் அலுவலகம் வெளியே பொத் என்ற சத்தம் கேட்டது. என்ன என்று பார்த்தால் ஒருவர் மாடியில் இருந்து விழுந்தது தெரிய வந்துள்ளது.
கீழே விழுந்த பிரதீப் குமாரை உடனே மீட்டு மருத்துவமனையில் அங்கிருந்த மக்கள் சேர்த்து உள்ளனர் . ஆனால் படுகாயம் அடைந்திருந்த பிரதீப் குமார் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே மோசமான காயங்களுடன் அவர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்கொலையா?
போனில் பேசியொண்டு இருந்த போது அவர் தவறுதலாக விழுந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் இது தற்கொலையாக இருக்குமோ என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதோடு கடைசியாக போனில் பிரதீப் குமார் யாரிடம் பேசினார் என்றும் விசாரணை செய்து வருகின்றனர் .
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம், இவர் தெலங்கானாவிற்கு மாறுதலாகி, அங்கு பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு பணி நிமித்தமாக ஏதாவது அழுத்தம் இருந்ததா என்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications