திடீரென தீப்பிடித்து எரிந்த கார்.. சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ அருகே பரபரப்பு!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை விமான நிலையத்திலிருந்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி செல்லக் கூடிய ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது அதன் முன்புறத்திலிருந்து திடீரென குபுகுபுவென கரும்புகை வெளியேறியது. இதனால் ஓட்டுநர் சூரஜ் அதிர்ச்சி அடைந்து காரை சாலையோரம் நிறுத்திவிட்டார். உடனே கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

மீனம்பாக்கம்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மீனம்பாக்கம் போலீஸாரும் விமான நிலைய தீயணைப்பு வீரர்களும் விரைந்து காரில் பற்றியெறிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து மீனம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் தீப்பற்றியது
இதனிடையே கார் தீப்பற்றி எரிந்த சம்பவத்தாலும் விபத்தை ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு வீடியோ எடுக்க முற்பட்டதாலும் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதிர்ச்சி
இதையடுத்து போக்குவரத்து போலீஸார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர். அண்மைகாலமாக சாலையில் செல்லும் வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.

ரோகிணி தியேட்டர்
கடந்த நவம்பர் 6ஆம் தேதி சென்னை கோயம்பேடு அருகே சினிமா தியேட்டர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது. அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் தீபாவளி பண்டிகையைொட்டி தனது குடும்பத்தினருடன் கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு சென்றிருந்தார்.

காரின் முன் பகுதியில் புகை
அப்போது தியேட்டர் வளாகத்திற்குள் கார் வந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதையடுத்து தகவலறிந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications