Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உங்களுக்கு ஒரு சேலஞ்ச்.. யானைகளுக்கு நடுவே பதுங்கியிருக்கும் பூனை.. 7 செகண்ட் தான் டைம் கண்டுபிடிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் யானைக்குட்டிகளுக்கு மத்தியில் பூனை ஒன்று மறைந்துள்ளது. இந்த பூனையை 7 செகண்டில் கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ் தான்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பதற்கு மாயை என்று பெயர். பார்க்கும் நம் கண்களை ஏமாற்றும் தன்மை கொண்டது என்றும் கூறலாம். முதலில் இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பார்க்கும் போது ஒரு வித தோற்றத்தையும் சற்று கூர்ந்து பார்த்தாலோ அல்லது பார்க்கும் கோணத்தை மாற்றி பார்த்தாலோ வேறு வித தோற்றத்தையும் காண்பிக்கும்.

A cat hiding among baby elephants, If you can find it in 7 seconds, you are a genius

இதன் காரணமாக இது போன்ற படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகின்றன. சிலர் இதுபோன்ற படங்களை புதிர்களுக்கு பயன்படுத்துகின்றனர். நமது நுண்ணறிவினை சோதித்து பார்க்கவும் இது போன்ற படங்கள் உதவுகின்றன. இதனால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை இணையதள வாசிகள் பார்த்ததும் தங்களது ஐக்யூ திறனை சோதித்து பார்க்கின்றனர்.

அந்த வகையில் தான் இன்று சமூக வலைத்தளத்தில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிப்பது தான் இன்றைய சவால்.. அதாவது 7 செகண்டில் அந்த படத்தில் மறைந்திருக்கும் பூனையை கண்டுபிடிப்பது தான். கொடுக்கப்பட்ட படத்தில் யானைக்குட்டிகள் வரிசையாக இருக்கின்றன.

இந்த யானைக்குட்டிகளுக்கு இடையில் தான் ஒரு பூனைக்குட்டி மறைந்து இருக்கிறதாம்.. சரி.. டைம் எடுத்துக்கொண்டு இந்த பூனைக்குட்டியை உங்களால் 7 வினாடிக்கு கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.. என்ன ரெடியா...உங்களுக்கான டைம் ஸ்டார்ட்... 1,2,3,4,... ஓகே டைம் ஓவர்.. உங்களில் பலரும் இங்கே மறைந்து இருக்கும் பூனைக்குட்டியை கண்டு பிடித்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

மாதிரியே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருந்த பூனைக்குட்டியை கண்டுபிடித்திருந்தால் சூப்பர்.. நீங்க உண்மையாவே ஜீனியஸ்தான்.. கண்டுபிடிக்காவிட்டாலும் கவலைப்பட வேண்டாம்... நாங்க சில டிப்ஸ் தார்றோம் அதை வச்சி ஈசியா கண்டுபிடிச்சிடலாம்... படத்தின் இடது பக்கமோ... கீழ்பக்கமோ பூனையை தேடிக்கொண்டு இருக்க வேண்டாம்...

அப்படி தேடிக் கொண்டு இருந்தால் 7 நொடி இல்லை... 7 நிமிடம் ஆனாலும் உங்கள் கண்ணுக்கு பூனை தெரியாது..ஏனென்றால் பூனை அங்கு இல்லை... சரி எங்கதான் இருக்குன்னு கேட்க்றீங்களா... வலது பக்கத்தில் நன்றாக உற்று பாருங்கள்... பூனை அங்கேதான் யானைக்கு மத்தியில் பதுங்கியுள்ளது.. இப்போ கண்டுபிடித்து இருப்பீர்கள் என நம்புகிறோம்... இப்போதும் கண்டுபிடிக்கலன்னாலும் ஒரு பரவாயில்லை.. நாங்களே விடையை சொல்லி விடுகிறோம்..

A cat hiding among baby elephants, If you can find it in 7 seconds, you are a genius

பூனைக்குட்டி எங்கு உள்ளது என்பது படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளலாம். இணையத்தில் பொழுதை கழிக்கும் போது நாம் கவனிப்புத்திறனை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு ஜாலியான ஒரு புதிர் விளையாட்டுதான் இது..எனவே...கண்டுபிடிச்சவங்க.. கண்டுபிடிக்காதவங்க எல்லாரும் ஜீனியஸ் தான் போங்க...

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+