ஏகப்பட்ட இளம் பெண்கள்.. பேஸ்புக் மூலம்.. சென்னையில் நடந்த சீக்ரெட் விபச்சாரம்.. தட்டி தூக்கிய போலீஸ்
சென்னை: சென்னையில் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த இளைஞர் ஒருவர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இன்பார்மர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த கும்பல் கைது செய்யப்பட்டு உள்ளது.
ரஞ்சித் என்ற அந்த 33 வயது நபர் சென்னையில் நாவலூர் அருகே இருக்கும் தாழம்பூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இவர் பெண்களை வைத்து சென்னையில் ரகசியமாக பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார்.
சோஷியல் மீடியா மூலம் இவர் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோஷியல் மீடியா
பேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் நிறைய பாலியல் ரீதியான பக்கங்களை தொடங்கி, அதில் இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள் என்று கூறி கஸ்டமர்களை வர வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். பல பெண்களின் எண்களை சில பேஸ்புக் பக்கங்களில் ஷேர் செய்து இந்த பிஸ்னஸை ரஞ்சித் நடத்தி வந்து உள்ளதாக கூறப்படுகிறது . இவரின் கட்டுப்பாட்டில் பல பெண்கள் இருந்துள்ளனர். இதற்காக சென்னையில் இவர் சில ஹோட்டல்கள், சர்வீஸ் அப்பார்ட்மென்டுகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

பேஸ்புக்
பேஸ்புக்கில் 4க்கும் மேற்பட்ட பக்கங்களையும் நடத்தி வந்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் இன்பார்மர்கள் மூலம் சென்னை கமிஷ்னர் ஷங்கர் ஜிவாலுக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து இதை பற்றி விசாரிக்க ஸ்பெஷல் டீம் உருவாக்கப்பட்டது. கூடுதல் கமிஷ்னர், மத்திய கிரைம் பிரான்ச் அதிகாரிகள் அடங்கிய பெரிய டீம் உருவாக்கப்பட்டது. இந்த டீம் சில சமூக வலைதள பக்கங்களையும், பேஸ்புக்கில் இருக்கும் சில குழுக்களையும், சென்னையில் சில ஹோட்டல்களையும் நோட்டமிட்டு வந்தது.

போலீஸ் பிடித்தது
இந்த நிலையில்தான் ரஞ்சித் என்ற ரஞ்சித் ராகவ் சென்னையில் பாலியல் தொழிலை பெண்களை வைத்து ரகசியமாக நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இவரை தீவிரமாக தேடி வந்த போலீசார் சென்னையில் தாழம்பூர் பகுதியில் கைது செய்தனர். இவர் சிவகுமார், பிரதீப் ராஜ், ஜோஸ் ராய் ஆகிய பெயர்களில் பேஸ்புக்கில் பக்கங்களை தொடங்கி பெண்களை வைத்து பிஸ்னஸ் நடத்தி இருக்கிறார். இவர் பங்களா ஒன்றில் வசித்து வந்தது, வங்கி கணக்கில் பல லட்சம் இருந்ததும், பல மாநிலங்களுக்கு ஜாலியாக சுற்றுலா சென்றும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அம்பலம்
இவை எல்லாம் பாலியல் தொழில் மூலமாக வந்த பணம். சென்னையில் தி நகர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் இவர் பாலியல் தொழிலை நடத்தி வந்து இருக்கிறார். இதேபோல் இதற்கு முன் 5 முறை வேறு வேறு ஏரியாக்களில் பாலியல் தொழிலை ரஞ்சித் நடத்தி பின்னர் போலீஸ் நெருக்கடியால் அதை தற்காலிமாக விட்டு இருக்கிறார். கடந்த 3 வருடமாக இவரை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் இப்போதுதான் போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இவரின் கஸ்டடியில் இருந்த பெண்கள் பலர் மீட்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தோசைக்கல்லை எடுத்து வந்த மனைவி.. அடுத்த நொடியே வாயடைத்து போன வடமதுரை.. திடுக் திண்டுக்கல் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications