புதுச்சேரியில் காதலனுடன் லாட்ஜில் தங்கிய சென்னை பெண்.. நண்பனுக்கு இன்ப விருந்தாக்க முயற்சி
சென்னை: சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த இளம் பெண், சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள மாலில் வேலை செய்யும் நிரூபன் என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளார்கள். வாரஇறுதியில் புதுச்சேரிக்கு டூர் போகலாம் என காதலியை நிரூபன் அழைத்து சென்றாராம். அறை எடுத்துதங்கிய போது, அங்கு தனது நண்பன் ஒருவருடன் உல்லாசமாக இருக்குமாறு காதலன் கட்டாயப்படுத்தினாராம்.. இந்த விவகாரத்தில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்மூடித்தனமான காதல் கடைசியில் கற்பனை செய்ய முடியாத சிக்கலை பலருக்கு ஏற்படுத்துகிறது. சிலருக்கு முதல் காதல் கசப்பான அனுபவமாக இருக்கும். ஏதோ ஒரு ஆர்வத்தில் தனக்கு வரும் காதல் ப்ரோபோசல்களை ஏற்கும் பெண்கள், நினைக்கவே முடியாத படுகுழியில் விழும் சம்பவங்கள் நடக்கிறது. தன்னை ஒருவர் காதலிக்கிறார் என்பது ஒரு சில பெண்களுக்கு சந்தோஷத்தை தருகிறது.

அதேநேரம் அழகாக இருப்பதாக காதல் வசனங்களை அடுக்குமொழியில் பேசும் சிலர், தாங்கு தாங்கு என்று தாங்குவது போல் நடிப்பார்கள். இறுதியில் காரியம் முடிந்ததும் ஏமாற்றுபவர்களாக இருப்பார்கள். அவர்களிடம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். சில ஆண்கள், பெண்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லவும் தயங்குவது இல்லை.. அதாவது காதலியை வேறுஒருவருக்கு விருந்தாக்கி சம்பாதிக்கவும் தயங்குவது இல்லை.. அப்படியான ஒரு சம்பவம் சினிமா பாணியில் நடக்க இருந்தது. அதில் அந்த பெண் எப்படி தப்பித்தார் என்பதை பார்ப்போம்.
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் 31 வயது பெண்ணும், சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் வேலை செய்யும் நிரூபன் (29) என்பவருடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிவந்தார்களாம்.
இந்த நிலையில் வார இறுதிநாளை கொண்டாட புதுச்சேரிக்கு செல்லலாம் என்று நிரூபன் அந்த பெண்ணிடம் தெரிவித்தாராம். காதலனை நம்பி அந்த பெண் புதுச்சேரிக்கு சென்றிருந்தாராம். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்த நிலையில், ஆரோவில் பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்குவதற்கு சென்றுள்ளார்கள்.
அப்போது தனது நண்பருடன் உல்லாசமாக இருக்குமாறு நிரூபன் அந்த பெண்ணிடம் வற்புறுத்தினார். நண்பனுக்கு விருந்தாக்க முயன்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண், அதற்கு மறுத்துவிட்டார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நிரூபன் அந்த பெண்ணை தரக்குறைவாக திட்டி, தாக்கினாராம். இதில் காயமடைந்த அவர், அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிரூபனை தீவிரமாக தேடிவருகின்றனர்.
-
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
வேளச்சேரி ஷாக்.. பாட்டியுடன் சென்ற 4 வயது குழந்தை பட்டப்பகலில் காரில் கடத்தல்.. இறுதியில் ட்விஸ்ட்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications