புரட்சிகர அரசு அமைக்க சதி- ஜெய்பீம்-க்கு எதிரான மாஜி போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கருத்தால் சர்ச்சை
சென்னை: நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்துக்கு எதிரான ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி வெளியிட்ட அறிக்கையால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தைக் கவிழ்த்து புரட்சிகர அரசு அமைவதற்கான கூட்டுச் சதிதான் ஜெய்பீம் திரைப்படம் என முன்னாள் காவல்துறை அதிகாரி கலியமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி எழுதியுள்ள கடிதம்: மேற்கு மண்டலத்தில் 35 ஆண்டுகள் பணிபுரிந்தவன் என்ற முறையில் தங்கள் குடும்பத்தினர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இதை எழுதும் இன்றுகூட (21.11.21)கொள்ளையனை துரத்தி சென்ற S.I பூமிநாதன் என்பவர் கீரனூர் அருகில் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்டார் செய்தி கேட்டு கொதித்து எழுதுகிறேன்.

பலாத்கார கொள்ளையர்கள்
தங்களுடைய கதைக்களம் 1995 மற்றும் அதற்கு முன்பும், பின்பும் கோவை சரகம் முழுமைக்கும் Crime Party தலைமையேற்று நூற்றுக்கணக்கான கொலை, கொள்ளை வழக்குகளைக் கண்டுபிடித்தவன் என்ற முறையில் உங்களுக்கு சில கேள்விகள். 1985 முதல் கோவை பகுதியில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் வீட்டை உடைத்து, ஆட்களை தாக்கி பணம், நகைகளை மட்டும் கொள்ளையடிப்பதில்லை. வீட்டில் உள்ள திருமணமாகாத பெண்கள் ;தாய்மார்களையும் கத்தி முனையில் கூட்டு சேர்ந்து பலாத்காரம் செய்வார்கள் என்பது தங்களுக்குத் தெரியுமா? நான் சம்பவ இடம் போகும் பொழுது எத்தனை பேர் என் கால்களைப் பிடித்து கதறி இருக்கிறார்கள் ;பணம் போகட்டும் பலாத்காரம் செய்ததை எழுதிவிடாதீர்கள், மானம் போய்விடும் என்று கதறிய குடும்பத்தைத் தாங்கள் பார்த்ததுண்டா? உங்கள் உறவினர்களை விசாரித்துப் பாருங்கள் எவரேனும் இருக்கக்கூடும்.(போகட்டும்).

ஜெய்பீம் நாயகன் மீது 39 கேஸ்கள்
"ஜெய்பீம்" கதையில் இறந்துப் போனவன், இரண்டு கொலை வழக்குகள் உட்பட 39 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவன் என்பதை மட்டும் ஏன் மறைத்தீர்கள்? நீங்கள் நேர்மையானவர் என்றால் அதையும் சொல்லி இருக்கலாமே? இதற்கு உள்நோக்கம் இல்லையா? ஏன் மறைத்தீர்கள்? நீங்கள் எல்லாம் நல்லவர்களா? (போகட்டும்) கதை துவக்கத்தில் கடலூர் மத்திய சிறை ஜெயிலர், ஜாதி பாகுபாடு காட்டி, முதலியார், செட்டியார், தேவர், கவுண்டர் என்று ஜாதி பெயரை சொல்லி வெளியில் அனுப்புவதும் குறவர், இருளர், ஒட்டர் என ஜாதிப் பெயரைக்கூறி தனிமைப் படுத்துவதும், அவர்களை Crime party போலிசார் ஜெயிலருக்குப் பணம் கொடுத்து ஆடுமாடுகளைப்போல விலைக்கு வாங்குவதும் இதுவரை தமிழகக் காவல் துறை வரலாற்றில் நடந்ததுண்டா? நடக்காததை நடந்ததாகக் காட்டும் தங்களின் நோக்கம் என்ன? நேர்மையான நோக்கமா? உள்நோக்கம் இல்லையா?

புரட்சிகர அரசு அமைக்க கூட்டுச் சதி
இதில்தான் உங்களுடைய கூட்டு சதியே மறைந்துக் கிடக்கிறது. குடியாட்சி முறையை அழிக்கவேண்டும் என்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை முடக்க வேண்டும். அரசை முடக்கவேண்டும் என்றால், அரசு எந்திரங்களை முடக்க வேண்டும். அரசு எந்திரங்களை முடக்க வேண்டுமென்றால் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டும். சட்டம் ஒழுங்கு சீர்குலைய வேண்டுமென்றால், அதை பாதுகாக்கும் காவல்துறையும், சிறைத்துறையும், முடக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து சாதியினரும் உள்ள காவல், சிறைத்துறையில் மேல் சாதி, கீழ்சாதி என பிரிவினையை ஏற்படுத்தி அதன் கலகம் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு கெட வேண்டும்.அதன்மூலம் குடியாட்சி அரசை கவிழ்த்து, தாங்கள் விரும்பும் புரட்சிகர ஆட்சி அமைய வேண்டும், நாடு துண்டாடப்பட வேண்டும், சீனா போன்ற அந்நிய சக்திக்கு விலை போகவேண்டும். இதுதானே உங்களுடைய திட்டம்.இது இந்திய தண்டனைச் சட்டம் 153A, 153B படி குற்றமில்லையா? காவல் துறை என்ன செய்துக்கொண்டிருக்கிறது? ஆயிரம் உண்டெம்மில் சாதி-எனில், அநீதிகண்டு கொதிப்பதெம் நீதி. தீயில்பூத்தத் தாமரை நாங்கள்-சூரியக் கதிர்களால் தீய்ந்திட மாட்டோம். இவ்வாறு ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. கலியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாலபாரதி கண்டனம்
கலியமூர்த்தியின் இந்த அறிக்கையை பதிவிட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. திண்டுக்கல் பாலபாரதி, ஜிகலியமூர்த்தி ஓய்வு பெற்ற காவல்துறை இதுபோன்ற செய்திகளைப் பரப்புவதை நிறுத்த தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா....? என தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இடதுசாரி கட்சியினர், கலியமூர்த்திக்கு கடும் கண்டனம் தெரிவித்து பாலபாரதியின் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications