ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான செளமியா ரெட்டியை ஆதரித்து திருமாவளவன் பிரசாரம்- பற்ற வைத்த பாஜக
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் போராடிய காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரித்து பிரசாரம் செய்ததற்கு தமிழ்நாடு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் நாளை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. மே 13-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கர்நாடகா தேர்தல் பிரசாரம், ஒரு மாநில தேர்தல் பிரசாரம் போல இல்லாமல் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா. ஆகையால் இம்மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பாஜகவின் போராட்டம். இதற்காக பிரதமர் மோடி இடைவிடாமல் கர்நாடகாவில் அடுத்தடுத்து பிரசாரங்களை மேற்கொண்டார். மத்திய அமைச்சர்கள் பட்டாளமும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர். பாஜகவுக்கு கடும் போட்டியைத் தரும் வகையில் காங்கிரஸ் கட்சியும் இதுவரை இல்லாத வகையில் தீவிர பிரசாரம் நடத்தியது. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா என ஒட்டுமொத்த குடும்பமும் தேர்தல் பிரசாரம் செய்தது. கர்நாடகா தேர்தல் களத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் முக்கிய இடம் பிடித்தன. இரு கட்சிகளின் இலவச வாக்குறுதிகள் கவனத்தைப் பெற்றன.
தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களும் கர்நாடகா தேர்தலுக்காக பிரசாரம் செய்தனர். தமிழர் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். இதில் ஒன்று ஜெயநகர் தொகுதி. இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி பிரசாரம் செய்தார்.

திருமாவளவனின் இந்த பிரசாரத்தை இப்போது பாஜக சர்ச்சையாக்கி இருக்கிறது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் சூர்யா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்/தமிழர் விரோதி திரு.@thirumaofficial என்பது மீண்டும் ஒரு முறை நிரூபனமாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து #ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான கர்நாடகா ஜெயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ செளமியா ரெட்டிக்கு(@Sowmyareddyr
) கூச்ச நாச்சமின்றி வாக்கு கேட்கிறார்.
இப்பெண் இன்றுவரை மீண்டும் ஜல்லிக்கட்டை தடை செய்வேன் என கங்கனம் கட்டிக்கொண்டு தான் திரிகிறார். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தமிழர் விரோதிகளுடன் கூட கூட்டு வைப்பேன் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அற்ப அரசியலை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஜெயநகர் பகுதியில் வாழும் தமிழர்கள் அரசியல் வியாபாரி திருமாவளவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார். இப்போது சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் பேசு பொருளாகி இருக்கிறது.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications