வாக்குறுதியை விடுங்க! ரகுபதி அதிமுகவிலிருந்து திமுகவுக்கு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவர்தான்-இன்பதுரை
சென்னை: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள், திமுகவிடமிருந்து காப்பியடிக்கப்பட்டவை என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்திருந்தார். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கும் அதிமுக எம்பி இன்பதுரை, "ரகுபதியே அதிமுகவிலிருந்து திமுகவுக்கு காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவர்தான்" என்று விமர்சித்திருக்கிறார்.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக தனது முதற்கட்ட வாக்குறுதியை அறிவித்திருக்கிறது. அதில், மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2000 கொடுக்கப்படும் என்றும், 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக வாக்குறுதி
இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தங்கள் ஆட்சியின் திட்டங்களை பார்த்து காப்பியடிக்கப்பட்டது என்று திமுக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ரகுபதி, "திமுக அரசின் சாதனைத் திட்டங்களை முதன்முறையாக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மறைமுகமாகப் பாராட்டியிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்குக் கட்டணமில்லா பேருந்து திட்டம், அனைவருக்கும் வீடு என திமுக அரசின் திட்டங்களையே வழிமொழிந்திருக்கிறார்.
ரகுபதியின் விமர்சனம்
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம், நகரப் பேருந்துகளில் விலையில்லாமல் பயணம் செய்யும் மகளிர் விடியல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றுக்கு அதிமுக நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் மிகப் பெரிய தாக்கத்தை இந்தத் திட்டங்கள் ஏற்படுத்தியிருப்பதை, எதிர்க் கட்சித் தலைவர் உணர்ந்திருப்பதன் தாக்கம்தான் இப்போது அந்த திட்டங்களையே காப்பி அடித்துத் தேர்தல் வாக்குறுதியாகத் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மகளிருக்குக் கட்டணமில்லா பயணம், மாதந்தோறும் ரூ.1000 போன்ற வாக்குறுதியைத் தந்து திமுக ஆட்சிக்கு வந்தபோது, கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததாகப் பேசினார் பழனிசாமி. "குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துக் கடத்துவது போல், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து திமுக மக்களை ஏமாற்றியது" என்றெல்லாம் பேசிய பழனிசாமியின் நாக்குதான் இப்போது அதே திட்டங்களையே வாக்குறுதி என உருமாற்றிப் பேசுகிறது.
இன்பதுரையின் விமர்சனம்
புதிதாக எதையும் வாக்குறுதியாகத் தர இயலாத பரிதாப நிலைக்கு போய்விட்ட பழனிசாமி திமுக வெற்றிகரமாக நிறைவேற்றிய திட்டங்களையே "காப்பி பேஸ்ட்" வாக்குறுதியாக அறிவித்திருக்கிறார். திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களையே அதிமுக வாக்குறுதிகளாக அறிவித்திருப்பது மீண்டும் திமுக வெற்றிபெற்று ஆட்சியைத் தொடரும் என்பதைக் காட்டுகிறது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ரகுபதியே காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவர்தான் என அதிமுக எம்பி இன்பதுரை விமர்சித்திருக்கிறார். இது ரகுபதி குறித்த விவாதங்களை அதிகரித்திருக்கிறது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications