பின்னால் வந்த எமன்.. கணவன், மனைவியை காவு வாங்கிய தனியார் பேருந்து.. நடந்தது என்ன?
சென்னை: சென்னை, கேளம்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த கணவன், மனைவி மீது தனியார் பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோது வெளியில் சென்ற நிலையில் இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபகாலமாக சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் தனியார் பேருந்துகள் மற்ற பேருந்துகளைவிட விரைவாகச் செல்ல வேண்டும், குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே சென்று பயணிகளை ஏற்ற வேண்டும் என்பதற்காக தாறுமாறாக பேருந்தை இயக்குவதும், அதிக ஒலி எழுப்பான்களை ஒலிக்கச் செய்வது, அதிக சப்தத்துடன் பேருந்துக்குள் பாடல் போடுவது என்று ஒரு சில தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இருக்காது. ஒத்தப் பாலத்துக்கிட்ட கை விழுந்துச்சே நீ எடுத்துக்கலையா என்ற விவேக்கின் காமெடியைப் போல தனியார் பேருந்தில் ஏறிவிட்டு உசுரோடு வீடு திரும்பினால் போதும்டா சாமி என்கிற மனநிலைக்கு பயணிகளை கொண்டு வந்து விடுகின்றனர் ஓட்டுநர்கள்.

இந்நிலையில், சென்னை, கேளம்பாக்கம் அருகே விடுமுறைக்காக வீட்டுக்கு வந்த துப்புரவு மேற்பார்வையாளர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில் பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாடம்பாக்கம், ஸ்ரீராம் நகர் அருகே உள்ள நத்தஞ்சேரி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தாமோதரன் (53). மாமல்லபுரம் பேரூராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் இவர் மாமல்லபுரத்திலேயே வீடு எடுத்து தங்கி வேலை செய்து வந்தார். விடுமுறை நாட்களின்போது தனது வீட்டுக்குச் செல்லும் இவர் விடுமுறை முடிந்த பின்னர் வேலைக்குத் திரும்பிவிடுவது வழக்கம்
இந்நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை மாடம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறைக்காகச் சென்றுள்ளார் தாமோதரன். திங்கள்கிழமை காலையில் அவரும், அவரது மனைவி ஜெயதுர்கா (47) இருவரும் மாடம்பாக்கத்தில் இருந்து மாமல்லபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மாடம்பாக்கம் -புதுப்பாக்கம் சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சாலை விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் பேருந்துடன் தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, தகவலறிந்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற தனியார் நிறுவனப் பேருந்தை கேளம்பாக்கம் போலீஸார் மடக்கி பிடித்தனர். பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீஸார் தனியார் நிறுவன பேருந்து ஓட்டுநர் கோடீஸ்வரன் (26) என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளரும், அவரது மனைவியும் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications