சென்னை கொளத்தூரில் அதிர்ச்சி! சாலையில் நடந்து சென்ற பெண்ணை முட்டி தூக்கிய மாடு.. பரபரப்பு வீடியோ
சென்னை: சென்னை கொளத்தூர் பகுதியில் மகளுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாக பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சில சமயங்களில் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது. தெருவில் மேயவிடப்படும் மாடுகள் சில சமயங்களில் சாலையில் நடந்து செல்பவர்களை முட்டி தூக்குகிறது. வாகனங்களில் செல்பவர்களையும் முட்டித் தூக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகின்றன.

இந்த நிலையில் சென்னை கொளத்தூர் பகுதியில் சாலையில் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை மாடு ஒன்று முட்டி தூக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், "8 வயது மதிக்கத்தக்க தன் மகளுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது சாலையில் கன்றுக்குட்டியுடன் பசு மாடு ஒன்று சென்றுகொண்டிருந்தது. பசு மாட்டை பார்த்ததும், பயந்துபோன இந்த பெண் தன் மகளை சாலையின் ஓரமாக அழைத்து சென்று கடந்து செல்ல முயன்றார். ஆனால் திடீரென அந்த மாடு சிறுமியை முட்டி தாக்க முயன்றது. இதைப் பார்த்ததும் பதறிப்போன அந்த தாய் மகளை மறைத்து தப்பி செல்ல முயன்றார்.
எனினும் அந்த மாடு விடாமல் அந்த பெண்ணை ஆக்ரோஷமாக முட்டி தாக்கியது. தொடர்ந்து மாறி மாறி கொம்பால் முட்டி தூக்கி போட்டது. இதற்கிடையே அந்த சாலையில் வந்து கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் உள்பட பொதுமக்கள் போராடி அந்த மாட்டை அங்கிருந்து விரட்டி விட்டு பெண்ணை மீட்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து கொளத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை மாடு ஆக்ரோஷமாக முட்டி தூக்கிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை கடுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications