செல்போனை ஆஃப் செய்துவிட்டு தலைமறைவான ராஜ்மோகன் பேசலாமா? - திமுக முன்னாள் எம்.எல்.ஏ கொந்தளிப்பு!
சென்னை: "நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக் கழகம், 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக-வைப் பார்த்து தைரியம் பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. உங்களுக்கு மிசா தெரியுமா? பொடா தெரியுமா? சிறைவாசம் கண்டதுண்டா? சினிமாவில் நடித்தவர் தலைவர், மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என உருவான இந்த இன்ஸ்டன்ட் அமைச்சரவை எத்தனை நாள் நீடிக்கிறது என்று பார்ப்போம்." என அமைச்சர் ராஜ்மோகன் கருத்துக்கு, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று வரை ஸ்கிரிப்ட் வைத்தே பேசும் உங்கள் தலைவர் விஜய்க்கு, செய்தியாளர்களை நேரில் சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது? என்றும் எழும்பூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோதனையை எதிர்கொண்ட முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அன்றிரவே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். ஆனால், கரூர் சம்பவத்திற்கு பிறகு உங்களில் யாராவது செய்தியாளர்களை சந்தித்ததுண்டா? இன்று வரை ஸ்கிரிப்ட் வைத்தே பேசும் உங்கள் தலைவர் விஜய்க்கு, செய்தியாளர்களை நேரில் சந்திக்க ஏன் தொடை நடுங்குகிறது?
எ.வ.வேலு மீதான சோதனையில் ஆதாரம் எதுவும் இல்லை, உங்கள் அவதாரம் விரைவில் தோலுரியும்! தைரியத்துடன் எதிர்கொள்ளம்வேண்டும் என்று யார் சொல்கிறார் தெரியுமா? கரூரில் 41 அப்பாவி பொதுமக்கள் பலியாவதற்கு காரணமான தவெக தலைவர் விஜய் பின்னங்கால் பிடற ஓடி ஒளிந்தவர் வரிசையில் உங்கள் அலைபேசியைக்கூட அணைத்து வைத்து தலைமறைவான ராஜ்மோகன் பேசலாமா?
நேற்று மழையில் முளைத்த தமிழக வெற்றிக் கழகம், 75 ஆண்டுகால வரலாறு கொண்ட திமுக-வைப் பார்த்து தைரியம் பற்றி பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. உங்களுக்கு மிசா தெரியுமா? பொடா தெரியுமா? சிறைவாசம் கண்டதுண்டா? சினிமாவில் நடித்தவர் தலைவர், மேடைகளில் தொகுத்தவர் அமைச்சர் என உருவான இந்த இன்ஸ்டன்ட் அமைச்சரவை எத்தனை நாள் நீடிக்கிறது என்று பார்ப்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications