வித்யாசாகர் மகள் யார் தெரியுமா? அப்பாவுக்கு ஆப்போசிட்! ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய போட்டோ
சென்னை: 90ஸ் மட்டும் 2000 காலகட்டத்தில் வளர்ந்த ரசிகர்களிடம் உங்களுக்கு பிடித்த மெலடி பாடல் எது என்று கேட்டால் அந்த பட்டியலில் இசையமைப்பாளர் வித்யாசாகரின் பாடல்கள் இல்லாமல் இருக்க வாய்ப்பே குறைவு. காதல், சோகம், கொண்டாட்டம் என எந்த உணர்வாக இருந்தாலும் அதை அப்படியே இசையில் அழகாக கொடுத்தவர் வித்யாசாகர்.
ஆனால் தன்னுடைய இசையை வைத்து பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த வித்யாசாகர் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை பெரிதாக வெளிச்சத்தில் காட்டிக் கொண்டதில்லை. இதனால் அவருடைய மகன் ஹர்ஷவர்தன் குறித்து ரசிகர்களுக்கு தெரிந்த அளவிற்கு கூட மகள் குறித்து பலருக்கும் தெரியாது.

இசையமைப்பாளர் வித்யாசாகர் மகள்
இந்த நிலையில் தான் வித்தியாசாகரின் மகள் பல்லவி சுசர்லா தன்னுடைய அப்பாவுடன் எடுத்துக் கொண்ட பேமிலி போட்டோக்களை பகிர்ந்திருக்கிறார். அந்த போட்டோவை பார்த்ததும் இதுதான் வித்யாசாகரின் மகளா? என்ற கேள்வி பலருக்கு எழுந்திருக்கிறது. வித்யாசாகரின் பிறந்தநாளை முன்னிட்டு பல்லவி வெளியிட்ட பதிவில், காலம் கடந்தும் நிலைத்திருக்கும் இசைக்கு சொந்தக்காரர்.. அதைவிட மென்மையான இதயம் கொண்ட மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா என்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வித்யாசாகர் மகள் பதிவு
அதுபோல "பல கோடி இதயங்களை ஆளும் லெஜன்ட்.. தனக்கு அன்பான எளிமையான அப்பாவாக கிடைத்திருப்பதற்கு என்றும் நன்றியுடன் இருப்பதாக" அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார். அப்பா வித்யாசாகர் உடன் பல்லவி எடுத்த செல்ஃபி மற்றும் ஃபேமிலி போட்டோஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபோல பல்லவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேஷன், பியூட்டி, டிராவல் மற்றும் லைப் ஸ்டைல் சார்ந்த போஸ்ட்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

வித்யாசாகர் மகன்
அதோடு தன்னுடைய ப்ரொபைலில் "சென்னை பொண்ணு" என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார். வித்யாசாகர் மட்டுமல்லாமல் இப்போ உள்ள 2K கிட்ஸ்களுக்கும் அவருடைய மகன் ஹர்ஷவர்தன் பலருக்கும் தெரிந்திருக்கும். இருவரும் இசை மற்றும் பாடல் துறையில் கவனம் செலுத்தி வருகின்றனர். கர்நாடக இசை பயிற்சியுடன் கிட்டார், பியானோ உள்ளிட்ட இசை கருவிகளையும் இருவரும் பயிற்சி பெற்றவர்கள். ஆனால் பல்லவி அப்பா மற்றும் சகோதரரை போல திரைப்பட இசையில் கவனம் செலுத்தவில்லை மாறாக சோசியல் மீடியாவில் தன்னுடைய தனித்துவத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்.

வித்யாசாகர் இசையமைத்த படங்கள்
வித்யாசாகரின் இசை பயணத்தை பார்த்தால் அவருடைய தந்தை தான் அவருக்கு குருவாக இருந்திருக்கிறார். 11 வயதிலேயே சுமார் பத்து இசைக்கருவிகளை வாசிக்கும் அளவிற்கு இசை கலைஞராக வளர்ந்ததாக வித்யாசாகரே ஒரு பேட்டியில் பேசி இருந்தார். தமிழில் பூ மனம் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய வித்தியாசாகர் பிறகு தில், ரன், தூள், கில்லி, அன்பே சிவம், சந்திரமுகி, மொழி என பல தலைமுறைகள் கடந்தும் கேட்கப்படும் பாடல்களை கொடுத்திருக்கிறார்.
விஜய், அஜித், மாதவன் முத்திரைப் பதித்த 2000-ம் ஆண்டு தமிழ் சினிமா! காதலைக் கொண்டாடிய மில்லினியம்!
தமிழில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கிலும் தன்னுடைய தனி ஸ்டைலால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். இப்போது வித்யாசாகர் மகள் பல்லவி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்ததும் பலரும் இவங்க அப்படியே அப்பா போலவே இருக்கிறாரே என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் கொடுக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் நாங்க இவங்க வீடியோவை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் ஆனால் அது வித்யாசாகர் பொண்ணுன்னு தெரியாது என்று கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர்.













Click it and Unblock the Notifications