அப்பாவை காணோம்.. தேடும் மகன், மகள்! நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: அப்பாவை காணோம் என்ற வாசகங்களுடன் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் திமுக சார்பில் நெல்லை முழுவதும் ஒட்டப்பட்டிருப்பதால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் சட்டமன்றத்தில் அப்பாவை காணோம் என்று முதலமைச்சர் பேசியிருந்தது திமுகவினரிடையே கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இப்படி இருக்கையில் திமுக சார்பில் நெல்லையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் தவெகவினரை சூடாக்கியிருக்கிறது.

Mystery Posters in Tirunelveli

என்ன நடந்தது?

சட்டமன்ற கூட்டத்தில் பேசிய விஜய், அப்பாவை காணோம் என்று கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இது திமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, முதலமைச்சர் விஜய்யின் மகன், மகள்தான் அவரை காணோம் என்று தேடுவதாக.. விஜய்க்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

விஜய் இப்படி பேசியிருக்க கூடாது என்று, தவெகவுக்கு ஆதரவு கொடுத்த இடதுசாரிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். இருப்பினும் விஜய் பேசிய வீடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜய்யின் மகன் மற்றும் மகள் தந்தை விஜய்யை தேடுகிறார்கள் என்று திமுக ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில், திருநெல்வேலி மாவட்டம் கடையம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன் பெயரில் தென்காசி பகுதியில் அப்பாவை காணோம் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. போஸ்டரில், அப்பாவை காணோம் என்று குறிப்பிட்டு மகன் மற்றும் மகள் கையில் லாந்தர் விளக்குடன் அப்பாவை தேடுவதை போன்ற படம் இடம் பெற்றிருக்கிறது. இப்போஸ்டர்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+