Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடையே.. கோர்ட்டில் கேட்ட குழந்தையின் அழுகை சத்தம்! நீதிபதி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு வந்தன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவையும் இன்று அவர் விசாரித்தார்.

இதில் அமலாக்கத்துறை பல்வேறு வாதங்களை வைத்தது. முக்கியமாக செந்தில் பாலாஜியின் தம்பி தொடர்பாக முக்கியமான வாதம் ஒன்றை அமலாக்கத்துறை வைத்துள்ளது.முக்கியமாக செந்தில் பாலாஜி ஜாமீனை எதிர்த்து கடுமையான வாதங்களை வைத்தது.

A crying baby case got trending amid Tamil Nadu Minister Senthil Balaji bail case in court

இதில் அமலாக்கத்துறை வைத்த வாதத்தில், சகோதரர் அசோக் குமார் தலைமறைவாக உள்ளார். அவர் இப்படி மறைவாக உள்ள நிலையில் எப்படி செந்தில் பாலாஜியும் ஜாமீனில் வெளியில் வர முடியும்.

அவர் வந்தால் சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற காரணத்தை எப்படி ஜாமீனுக்கு காரணமாக சொல்ல முடியும். அதை மட்டும் அடிப்படையாக வைத்து தொடர்ச்சியாக ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது. காலம் கடக்கிறது என்றால்.. வழக்கை துரிதப்படுத்தலாம். அவர் ஒரே காரணத்தை வைத்து மீண்டும் மீண்டும் ஜாமீன் கேட்கிறார். அதை எப்படி கொடுக்க முடியும்.

செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு பதிலாக இந்த வழக்கை முடிக்க வேண்டும். விரைவாக விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், என்று வாதம் வைத்துள்ளனர் .

குழந்தை அழுகை: இந்த வழக்குகளுக்கு இடையே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க வேண்டும் என்பதற்காக..ஒரு மனுதாரர் குழந்தையுடன் காத்து இருந்தார். அந்த குழந்தை அழுதபடி இருந்தது. அப்போது கோர்ட் பணியாளரை அழைத்து அந்த குழந்தை அழுது கொண்டே இருக்கிறது.

முதலில் அவரின் வழக்கை விசாரிப்போம். குழந்தை வீட்டிற்கு போக முடியும். அப்போதுதான் அழுகாது என்று கூறினார். இதையடுத்து அந்த குழந்தை வைத்திருந்தவரின் வழக்கு வரிசை பிரகாரம் இல்லாமல் முன்கூட்டியே விசாரிக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கு பின்னணி; சமீபத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கு; இதனிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைகிறது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V.ஆனந்த் வழக்கை விசாரித்தார்.

பின்னர் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 18வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரம் முன் விசாரணை; அதன்பின் இரண்டு வாரம் முன் இதில் விசாரணை நடந்தது. அப்போது 19வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டது. கடந்த விசாரணையின் போது, ​​பி.எம்.எல்.ஏ-வின் கீழ் 230 நாட்கள் சிறையில் இருந்தும் அவர் எப்படி அமைச்சராக நீடிக்க முடியும் என்று நீதிபதி கேட்டிருந்தார்.

சிறையில் அடைப்பு: 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அரசின் கடைசி தர ஊழியர் கூட சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும்போது, ​​இவ்வளவு காலம் சிறைவாசத்திற்குப் பிறகும் ஒருவரை எப்படி அமைச்சரவையில் தொடர அனுமதிக்க முடியும் என்று நீதிபதி ஆச்சரியப்பட்டார்.

"அரசு ஊழியர் விஷயத்தில் காட்டப்படும் கடுமை இப்படி இருக்கும்போது, ​​சிறைக்குள் இருக்கும் போது, ​​இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடரும் ஒருவர் இங்கே இருக்கிறார். என்ன வேடிக்கை இது. நீங்கள் பொதுமக்களுக்கு என்ன வகையான செய்தியை வழங்குகிறீர்கள்? என்று அமைச்சர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யம சுந்தரத்திடம் நீதிபதி கேட்டார். கடந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+