தலைவா நான் தீ குளிக்கட்டுமா? கோபமாக கேட்ட திமுக தொண்டர்.. துரைமுருகன் பதிலை பாருங்க!

வருமானவரித்துறை சோதனையை கண்டித்து, நான் வேண்டுமானால் தீ குளிக்கட்டுமா என்று திமுக பொருளாளர் துரைமுருகனிடம் திமுக தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Duraimurugan: தீ குளிக்கட்டுமா..? என கேட்ட தொண்டருக்கு துரைமுருகன் அளித்த பதில்- வீடியோ

    சென்னை: வருமானவரித்துறை சோதனையை கண்டித்து, நான் வேண்டுமானால் தீ குளிக்கட்டுமா என்று திமுக பொருளாளர் துரைமுருகனிடம் திமுக தொண்டர் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

    தமிழகத்தில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. முக்கியமாக திமுகவினர் வீடுகளில் கடுமையான சோதனைகள் நடந்து வருகிறது.

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக நடந்த ரெய்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. அதேபோல் திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கல்லூரியில் நடந்த வருமானவரித்துறையினர் சோதனையும் முடிந்துள்ளது.

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் இதுகுறித்து தனது பேட்டியில், அதிமுக - பாஜக கூட்டணிக்கு இப்போது தோல்வி பயம் வந்துவிட்டது. ஒரு கட்சியின் மூத்த உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தினால் கட்சியில் இருக்கும் மற்ற நபர்கள் பயந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள். நாங்கள் இப்போதுதான் மிக வலிமையாக இருக்கிறோம். எங்கள் பிரச்சாரம் இதனால் பாதித்து இருக்கிறது.

    தெரியாது

    தெரியாது

    ஆனால் இதுபோன்று தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதால் யாருக்கு பலன் என்ற "அரசியல் அரிச்சுவடி" கூட தெரியாதவர்களால் இது நடத்தப்படுகிறது. மக்கள் எங்கள் பக்கம் இருப்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இந்த ரெய்டு மக்களின் மனநிலையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு மட்டும்தான் தெரியும், என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.

    எப்படி பேசுகிறார்

    எப்படி பேசுகிறார்

    இந்த நிலையில் துரைமுருகன் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அங்கிருந்த தொண்டர் ஒருவர் அவரை நோக்கி, தலைவா நான் தீ குளிக்கட்டுமா? சொல்லுங்க தலைவா, இப்பவே நான் தீ குளிக்க தயார் என்று கத்தி சத்தமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    ஆனால் கொஞ்சமும் அதிர்ச்சி அடையாத துரைமுருகன், தீக்குளிச்சா நீ செத்துப்போயிடுவ. அதனால் தீ எல்லாம் குளிக்காத, போய் டீ குடிச்சிட்டு வேலையை பாரு என்று கிண்டலாக பாசத்தோடு குறிப்பிட்டார். இதையடுத்து அங்கிருந்த தொண்டர்கள் எல்லோரும் கரகோஷம் எழுப்பினார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+