கோவைக்கு ஸ்டாலின் போன நேரத்தில்.. திருப்பூரில் தட்டி தூக்கிய அண்ணாமலை.. வலையில் சிக்கிய புள்ளி.. ஆஹா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டல மாற்று கட்சியினர் திமுகவில் இன்று இணைய உள்ளனர். இதே நாளில் திமுகவை சேர்ந்த முக்கியமான நிர்வாகி, அண்ணாமலை முன்பு பாஜகவில் இணைந்தார்.

மூன்று நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்திற்கு சென்றுள்ளார். நேற்று இரவு கோவை சென்ற முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

இதில் ரூ.662.50 கோடியில் 748 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஏற்கனவே முடிக்கப்பட்ட திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். இதன்பின் கோவையில் நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

இதையடுத்து இன்று மாலை மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

மாற்று கட்சிகள்

மாற்று கட்சிகள்

இதற்கான தீவிரமாக பணிகளை திமுக செய்து வருகிறது. மொத்தம் 50 ஆயிரம் பேர் மாற்று கட்சிகளில் இருந்து திமுகவில் இணைய உள்ளனர். மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் ஆச்சிபட்டி திடலில் இதற்கான விழா நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியினர் இந்த விழாவில் இணைய உள்ளனர். தேமுதிக முன்னாள் எம்எல்ஏ தினகரன் திமுகவில் இன்று இணைய உள்ளார். கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி திமுகவில் இணைய உள்ளனர்.

பாஜக நிர்வாகிகள்

பாஜக நிர்வாகிகள்

பாஜக நிர்வாகிகள் சிலரும் இன்று மாலை திமுகவில் இணைய உள்ளனர். கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு ஏற்கனவே ஆதரவு உள்ளது. அதிமுக அங்கு சுணக்கம் அடைந்துள்ள நிலையில் அதை பயன்படுத்தி பாஜக வளர்ந்து வருகிறது. அதிமுகவின் அடிமட்ட நிர்வாகிகள் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவில் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். இருப்பினும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் பாஜக சரியாக செயல்படவில்லை. முக்கியமாக கோவையில் பாஜக பின்னடைவை சந்தித்தது.

திமுக இணைப்பு

திமுக இணைப்பு

இந்த நிலையில்தான் தற்போது பாஜக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய உள்ளனர். இன்று திமுகவில் 50000 மாற்று நிர்வாகிகள் இணைய உள்ளனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் அதிமுகவினர் அடங்குவார்கள். பாஜக நிர்வாகிகள் 1000 பேர் வரை திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் தொண்டர்கள் என்று கூறப்படுகிறது. இது பாஜக கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில்தான் திமுகவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முக்கியமான நிர்வாகியை பாஜக தட்டி தூக்கி உள்ளது. திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் க.பாலமுருகன் பாஜகவில் இணைந்தார். அண்ணாமலை முன்பு இன்று பாஜகவில் பாலமுருகன் இணைந்தார். திமுக இளைஞரணியில் முக்கியமான உறுப்பினராக இவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இன்று பலர் இணைய உள்ள நிலையில் திருப்பூரில் இவர் திமுகவில் இருந்து பாஜகவிற்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+