உன்னோட 'அந்த' வீடியோ இருக்கு.. சென்னை நுங்கம்பாக்கத்தில் 23 வயது பெண்ணை மிரட்டியது சப்-இன்ஸ்பெக்டரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியிருந்த பெண்ணிடம் உங்களுடைய அந்த வீடியோ யூடியூப்பில் இருக்கிறது.. அதை நீக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் போல் பேசி மிரட்டி உள்ளார் ஒருவர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி, அந்த நபரை தேடி வருகிறார்கள்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த 23 வயது இளம்பெண் தங்கியிருக்கிறார். அந்த பெண் அங்கு தங்கியபடி, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

chennai police

இந்நிலையில் அப்பெண்ணின் செல்போன் எண்ணுக்கு, 'போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்' என்று மர்ம நபர் ஒருவர் பேசியிருக்கிறார்.
அவர், அந்த பெண்ணிடம், 'உன்னுடைய ஆபாச வீடியோ யூடியூப்பில் உள்ளது. எனக்கு ரூ.9 ஆயிரம் கொடுத்தால் அந்த வீடியோவை உடனே நீக்கிவிடுகிறேன்' என்று தெரிவித்தாராம்.

இதனால் பயந்து போன அந்த இளம்பெண், சப்-இன்ஸ்பெக்டர் என்று பேசியவரின் 'கூகுள் பே' எண்ணுக்கு ரூ.6 ஆயிரத்து 500 அனுப்பி இருக்கிறார். எதை பற்றியும் யோசிக்காமலும், விசாரிக்காமலும், பதற்றத்தில் பணத்தை அந்த பெண் அனுப்பிவைத்ததை பார்த்த அந்த நபர், அந்த பெண்ணின் தந்தையின் செல்போன் எண்ணை வாங்கி அவரிடம் பேசியிருக்கிறார்.

அப்போது அவரது மகளை பற்றி தவறாக கருத்துகளை கூறி, 'உங்கள் மகளின் நிர்வாண வீடியோ யூடியூப்பில் இருக்கிறது. இந்த வீடியோவை நீக்குவதற்கு ரூ.1 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்தி விடுவேன்' என்று மோசமாக பேசி மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து அந்த இளம்பெண், சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் சென்றார். தன்னிடம் செல்போனில் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பேசி மிரட்டியதாக குற்றம்சாட்டினார்... பெண் குறிப்பிட்ட பெயரில் யாரும் சப்-இன்ஸ்பெக்டர் இல்லை என்பதும், அந்த இளம்பெண்ணிடம் யாரோ மர்ம நபர் ஒருவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் பேசி, நிர்வாண படம் இருப்பதாக பொய்யான தகவலை சொல்லி மிரட்டி பணம் பறித்திருப்பதும் விசாரணையில் உறுதியானது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+