ஸ்ரீகாந்த் மட்டுமா.. போதை வழக்கில் சிக்க போகும் பிரபல நடிகை.. குலுங்கும் கோலிவுட்.. அவங்களா?
சென்னை: போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒரு நடிகை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில காலத்திற்கு முன்பு அரசியலில் நுழைந்த நடிகை ஒருவர் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீகாந்த் போதைக்கு அடிமையானது எப்படி?
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிரசாத் தயாரித்து வரும் 'தீங்கிரை' திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்தபோது, பிரசாத் அவருக்கு போதைப் பொருள் விற்றதாகக் கூறப்படுகிறது. "அந்தப் படத்தின்போதுதான் நான் போதைப் பொருளுக்கு அடிமையானேன். நானே கேட்கும் அளவுக்கு அடிமையாகிவிட்டேன். படத்தில் நடித்த பணத்தில் ரூ.10 லட்சம் பாக்கி இருந்தது, அந்தத் தொகைக்கு பதிலாக மூன்று முறை கொக்கைன் கொடுக்கப்பட்டது," என்று ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நான்காவது முறை கொக்கைனை தானே கேட்டுப் பெறும் அளவுக்கு அடிமையாகிவிட்டதாக ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இந்த வழக்கின் ஆரம்பம் கடந்த மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் நிர்வாகி பிரசாத் கைது செய்யப்பட்டதிலிருந்து தொடங்கியது. அவருடன் அதிமுக பிரமுகர் அஜய் வாண்டையார் மற்றும் ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அதிமுக முன்னாள் நிர்வாகியான பிரசாத் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைது செய்யப்பட்ட பிரசாத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட தொலைபேசி ஆதாரங்களின்படி, அவர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவரது தொலைபேசி விவரங்கள் சோதனை செய்யப்பட்டதில், அவர் சென்னையில் போதைப் பொருள் விற்பனையாளராக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவர் யாரிடம் போதைப் பொருள் வாங்கினார், யாருக்கு விநியோகம் செய்தார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதீப் குமாரையும் காவல்துறையினர் விசாரித்தனர்.
வழக்கு பின்னணி
காவல்துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், பிரதீப் மூலமாக ஸ்ரீகாந்திற்கு போதைப் பொருள் வழங்கியதை பிரசாத் ஒப்புக்கொண்டார். விசாரணையில், இவர்கள் கொக்கைன் விற்பனையாளர்களாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதற்கான ஆதாரங்கள் அவர்கள் கைபேசியில் இருந்தன.
ஸ்ரீகாந்த் பிரசாத்திடம் தான் கொக்கைன் வாங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இருந்து அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் ஸ்ரீகாந்த் சுமார் 40 முறை போதைப் பொருள் வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி பிரசாத், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.
பிரசாத் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு போதைப் பொருள் வழங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீகாந்த் கிளப் மற்றும் பார்களில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொண்டதன் மூலம், அதிமுக நிர்வாகியான பிரசாத்திடம் போதைப் பொருட்களை வாங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரசாத் ஒரு கிராம் கொக்கைனை ரூ.12,000-க்கு விற்றதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தை ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி தயாளன் உத்தரவிட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த வழக்கில் மேலும் ஒரு நடிகை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சில காலத்திற்கு முன்பு அரசியலில் நுழைந்த நடிகை ஒருவர் இந்த வழக்கில் சிக்கக்கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர் தேசிய கட்சி ஒன்றிற்கு நெருக்கம் என்றும் கூறப்படுகிறது. போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 8 முறை போதைப் பொருள் வாங்கிக் கொடுத்ததாகக் கூறப்படும் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. ஏற்கனவே பிரசாத் நுங்கம்பாக்கம் பப்-ல் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி என மொத்தம் 5 வழக்குகளில் கைதாகி குண்டர் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் உள்ளார்.












Click it and Unblock the Notifications