பிரபல கட்சிக்கு மூளையாக இருந்த.. மாஸ்டர்மைண்ட்.. பெரிய கையை அரசியல் ஆலோசகராக நியமிக்கும் விஜய்
சென்னை: நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அரசியல் ஆலோசகர் ஒருவரை நியமிக்கும் திட்டத்தில் உள்ளாராம். ஏற்கனவே அரசியல் கட்சிக்கு பணி செய்த ஒருவர்தான் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் ஆக இருக்கிறாராம்.
நடிகர் விஜய் சார்பாக முதலில் விஜய் மக்கள் இயக்கம்.. விஜய் மக்கள் கட்சி என்று மாற்றப்படும் திட்டத்தில் இருந்தது. ஆனால் அது சரியாக இல்லை என்பதால்.. தமிழக மக்கள் கட்சி என்று உருவாக்கும் திட்டம் இருந்தது.

தமிழக மக்கள் கட்சிதான் கடந்த வாரம் வரை இருந்தது. இந்த பெயர் கூட இணையத்தில் கசிந்தது. பெயர் கசிந்த காரணத்தால்.. விஜய் அப்போதே அப்செட் ஆனதாக கூட கூறப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் இந்த பெயரை கடைசியில் வேண்டாம் என்று நீக்கி உள்ளனர். அதற்கு காரணம் அதன் ஆங்கில சுருக்கம். தமிழக மக்கள் கட்சி என்பதை சுருக்கினால் TMK என்று வரும்.
அப்படி வந்தால் அது DMK என்பதை போலவே சத்தம் வரும். கிராமங்களில் வேறுபடுத்தி காட்டுவது கடினம். இதன் காரணமாகவே தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வெற்றிபெறும்.. தமிழ்நாட்டை வெற்றிபெற வைக்கும் கட்சி என்பதை உணர்த்தும் விதமாக.. தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது
கட்சி அறிவிப்பு: இது தொடர்பாக நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது.
அரசியல் கட்சி: தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் 'ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்" ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் "பிளவுவாத அரசியல் கலாச்சாரம்" மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. ஒரு தன்னலமற்ற, வெளிப்படையான, சாதிமத பேதமற்ற, தொலைநோக்கு சிந்தனை உடைய, லஞ்ச- ஊழலற்ற திறமையான நிர்வாகதிற்கு வழிவகுக்ககூடிய அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
அரசியல் மாற்றம்: மிக முக்கியமாக, அத்தகைய அரசியல், நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, தமிழ் நாட்டின் மாநில உரிமைகள் சார்ந்து, இந்த மண்ணுக்கேற்ற "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் (பிறப்பால் அனைவரும் சமம் ) என்கிற சமத்துவ கொள்கைபற்று உடையதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அடிப்படை அரசியல் மாற்றத்தை மக்களின் ஏகோபித்த அபிமானமும், அன்பும் பெற்ற முதன்மையான ஒரு மக்கள்சக்தியால் தான் சாத்தியப்படுத்த முடியும்.
எல்லாமும் கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் என்னால் முடிந்த வரையில், இன்னும் முழுமையாக உதவ வேண்டும் என்பதே எனது நீண்ட கால எண்ணம் மற்றும் விருப்பமாகும். "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
அரசியல் ஆலோசகர்: நடிகர் விஜய் தான் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு அரசியல் ஆலோசகர் ஒருவரை நியமிக்கும் திட்டத்தில் உள்ளாராம். ஏற்கனவே அரசியல் கட்சிக்கு பணி செய்த ஒருவர்தான் விஜய்க்கு அரசியல் ஆலோசகர் ஆக இருக்கிறாராம்.
அதன்படி ஏற்கனவே ஒரு சட்டசபை தேர்தல், ஒரு லோக்சபா தேர்தலில் பிரபல கட்சிக்கு அவர் வேலை பார்த்துள்ளார். வேற்று மாநிலங்களிலும் அவர் அரசியல் ரீதியாக பணிகளை செய்துள்ளார்.
அவரை தமிழ்நாட்டிற்கு மீண்டும் கொண்டு வந்து தேர்தல் பணிகளை செய்ய விஜய் முடிவு செய்துள்ளாராம். அதன்படி தேர்தலுக்கான முதல் கட்ட ஆலோசனைகள், கட்சியை நிர்மாணிப்பது., மாவட்ட அளவில் கட்சியின் பூத் கமிட்டி அளவிலான பணிகளை செய்வது உள்ளிட்ட பணிகளை செய்வது போன்ற திட்டங்களை விஜய் இந்த ஆலோசகர் உதவியுடன் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications