அந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்!

நடிகை கஸ்தூரியின் இளமை குறித்து ரசிகர் ட்வீட் போட்டு மகிழ்ந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்றைக்கு இருந்த மாதிரியே, இன்றைக்கும் கஸ்தூரிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளதை யாராலும் மறுக்க முடியவில்லைதான்!

அறிவார்த்தமான நடிகைகளில் ஒருவர்தான் கஸ்தூரி. நல்ல திறமைசாலி.. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த அறிவாளி!

A fan says that, Even today Actress Kasturi looks so young

90"களில் கஸ்தூரி நடித்த படங்கள் ஏராளம்.. ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். எனினும் சின்னவர் இன்றுவரை ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக உள்ளது.

சினிமாவில் இருந்து தற்போது ஓரளவு விலகினாலும், சமூக ரீதியான பிரச்சனைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். அரசியல் ஞானமும் பெற்றவர். அதனால் இவரது நிறைய பதிவுகள் வைரலாகி வருகின்றன.

இதைதவிர, ஃபேஸ்புக், ட்விட்டரில் நெட்டிசன்களிடம் அடிக்கடி உரையாடுவார். அவர்களின் கேள்விகளுக்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பதில் அளித்து சர்ப்ரைஸ் தருவார்!

இவரது ரசிகரில் ஒருவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதாவது கஸ்தூரி ஒரு நகை கடை விளம்பரத்தில் மாடலாக நடித்துள்ளார் போலும். அந்த போஸ்டரை ரசிகர் பார்த்துவிட்டார். சின்னவர் படத்துல பார்க்கிற கஸ்தூரி போலவே இன்னைக்கும் அப்படியே இளமை மாறாமல் இருக்கிறார் என்று குறிப்பிட்டு, அந்த போட்டோவையும் போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில், "இன்றும் இளமை மாற @KasthuriShankar நகை கடை விளம்பர மாடலாக.. புகைப்படம் பார்க்கும் பொழுது "அந்தியில வானம்" பாடல் நினைவு..அதே கஸ்தூரி..😍😍😍 இடம்:அமைந்தகரை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை கஸ்தூரி ரீ-ட்வீட் செய்துள்ளார். இப்படிப்பட்ட ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதில் கஸ்தூரிக்கு நிறைய சந்தோஷம் இருக்கவே செய்யும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+