அரசு பள்ளி.. 'தம்பி நீ தாக்குகிற மாணவரின் பெற்றோர் இந்த வீடியோவை பார்த்தால் எப்படி மனம் பதைக்கும்'

Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த ஊர் என்று சரியாகத் தெரியவில்லை... இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைக் காண நேர்ந்தது. அது தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் உள்ள ஓர் அரசுப் பள்ளியாகத் தெரிந்தது. அதில் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் இருக்கிறார்கள். அந்த வீடியோவில் ஒரு மாணவனைச் சமாதானம் செய்ய ஆசிரியர்கள் முயல்கிறார்கள். ஆனால், அந்த மாணவன் ஆக்ரோஷமாகச் சக மாணவனை ஆவேசமாக அடிக்கிறான். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர், பள்ளித் கல்வித்துறை அமைச்சரை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

இன்றைய மாணவர்களே வருங்காலத் தமிழகத்தின் எதிர்காலம். ஆனால், வருங்காலத்தை வடிவமைக்க வேண்டிய மாணவர்கள் தவறான திசையை நோக்கிப் பயணிக்கிறார்கள். கண்டிக்க வேண்டிய ஆசிரியர்களையே பயமுறுத்தும் அளவுக்கு ரவுடித்தனம் செய்வதும் அதிகரித்துள்ளது. "ஏறினா ரயிலு... இறங்கினா ஜெயிலு... போட்டா பெயிலு..." என்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அரசுப் பள்ளி மாணவன் ஆசிரியரிடம் வீர வசனம் பேசிய வீடியோ, பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.

A fellow student assaulted a student at a government school in the presence of teachers

"ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக் கூடாது; அவர்களைக் கடுமையாகக் கண்டிக்கக் கூடாது" என்று போட்ட உத்தரவால், பல மாணவர்கள் ஒழுக்கத்தைத் தொலைத்ததுடன், படிக்காமல் எதிர்காலத்தையும் தொலைத்துவிட்டு, ரீல்ஸ் போடுவதுதான் வாழ்க்கை என்று தவறான பாதையில் போய்விட்டார்கள். இன்ஸ்டாவில் வரும் ஒருசில பிரபலங்களை வழிகாட்டியாக நினைத்துக்கொண்டு, அவர்களைப் போல் இன்ஸ்டாவில் வீடியோ போட்டால் பிரபலம் ஆகலாம் என்று தவறாகப் பயணிக்கிறார்கள். பல இளைஞர்கள், பல சிறார்கள் வாழ்க்கையைத் தொலைக்க, ஒழுக்கம் தவறிப் போக இன்ஸ்டா முக்கியக் காரணமாக உருவெடுத்துள்ளது.

விஷயத்திற்கு வருவோம். கண்டிப்பு இல்லாமல், அசாதாரணமான சூழலில் வளரும் குழந்தைகள் தவறான பாதைக்கு எளிதாகப் போய்விடுகிறார்கள். இதனைச் சொல்லக் காரணம், "ஏறினா ரயிலு... இறங்கினா ஜெயிலு... போட்டா பெயிலு..." என்று வீரவசனம் பேசிய சிறுவன், பின்னாளில் பெரியவனான பிறகு, வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிறைக்குச் சென்றான்.

சிறுவர்கள் தவறான பாதையில் போவதற்குப் பெற்றோர்களே முக்கியமான காரணம். எந்தக் கவலையும் இல்லாமல் செல்லமாக வளர்க்கிறார்கள். கேட்பதையெல்லாம் வாங்கித் தருகிறார்கள். சின்ன அவமானம், சின்னச் சின்னக் கண்டிப்புக் கூடச் செய்யாமல் முரட்டுத்தனமாக வளர்க்கிறார்கள். அவர்கள் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டி கண்டிக்கும் சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பெற்றோர்கள் நேரில் வந்து மிரட்டுகிறார்கள். "நீ போ கபிலா... நாங்க இருக்கிறோம்" என்பது போல் மாணவனை வளர்க்கிறார்கள்.

இதனால் ஆசிரியர்கள் பற்றிய பயமோ, சக மாணவர்கள் தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணமோ இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் செய்கிறார்கள்; எதிர்ப்பவர்களை அடிக்கிறார்கள். இப்படி வளரும் குழந்தைகள் பின்னாளில் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பட்ட சிறார்களால் சக மாணவர்களும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

இவ்வளவு நீட்டி முழக்குவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று சமூக வலைதளங்களில் பரவும் ஒரு வீடியோவில், ஒரு மாணவன் சக மாணவனை ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி மோசமாகத் தாக்கியுள்ளான். அவன் கேவலமான வார்த்தைகளையும் பேசியுள்ளான். சக மாணவர்கள் அவனைப் பார்த்து அஞ்சி நடுங்கும் நிலை இருந்தது.

இந்த வீடியோவைப் பகிர்ந்த நெட்டிசன் வெளியிட்ட பதிவில், "என் தாய் தமிழகத்தின் வருங்காலத் தூண்கள் எனப்படும் மாணவச் செல்வங்கள், இளைய சமுதாயம் ஒழுக்கச் சீர்கேடடைந்து மிக மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டார்கள். கல்விச்சாலைகள்தான் ஒழுக்கத்தைப் போதிக்கும் கோவில், ஆசிரியர்கள் அங்கு தெய்வம் என்ற நிலை மாறி, ஒழுக்கச் சீர்கேட்டின் உச்சமாக மாறிவிட்டன பள்ளிக்கூடங்கள். அதனை மாற்றும் அதிகாரம் கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து இம்மாணவர்களை மீட்காமல் விட்டால், எதிர்காலத்தில் கடும் குற்றவாளிகளுக்கு இடையே நாம் வாழவேண்டி இருக்கும்.

தம்பி, நீ தாக்குகிற மாணவரின் பெற்றோர் இந்த வீடியோவைப் பார்க்கும்போது எப்படி மனம்பதைக்கும்? உனக்கு இந்த வலியை உணர்த்தவில்லை என்றால் நீ திருந்த வாய்ப்பில்லை. உன்னை அடித்துத் திருத்தத்தான் வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்தக்கருத்தையே பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+