2 லட்சம் சம்பளம், சொந்த வீடு, பிஎம்டபிள்யூ கார், நிஞ்சா பைக், சுட்சு நாய்.. இளம் பெண் எதிர்பார்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: Zee5 தமிழா தமிழா நிகழ்ச்சியில் தனக்கு வரப்போகும் கணவருக்கு என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரது எதிர்பார்ப்பை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விவாதித்துவருகிறார்கள். அதுபற்றி நெட்டிசன் ஒருவர், ரெண்டு லட்சம் சம்பளம் வாங்குறவன் நீங்க சொல்ற சொந்த வீடு, பிஎம்டபிள்யூ காரு, நிஞ்சா பைக்கு, அந்த சிட்சு நாய் எல்லாம் வாங்கி மெயின்டெய்ன் பண்ணும்னா சம்பளம் வந்த அன்னிலருந்து பிச்சை தான் எடுக்கனும் என்று விமர்சித்துள்ளார்.

Zee5 தமிழா தமிழா நிகழ்ச்சியில் தனக்கு வரப்போகும் கணவர் குறித்து பெண் ஒருவர் பேசுகையில், எனக்கு வந்து சம்பளம் வந்து இரண்டு லட்சம் போதும்.. பிஎம்டபிள்யூ கார் வேணும்.. நிஞ்சா பைக் வேண்டும், முக்கியமாக சிட்சு நாய் வேண்டும் என்று கூறினார். அப்போது நெறியாளர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு, சிட்சு என்றால் என்ன என்று கேட்டார். அதற்கு அவர், அது ஒரு பப்பி நாய் என்றார். மேலும் அது சூப்பராக இருக்கும் என்றும், அது தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறினார். அப்போது நெறியாளர் ஆவுடையப்பன் குறுக்கிட்டு, சொந்த வீடு வேண்டும், சொந்த பைக் வேண்டும்.. சொந்த கார் வேண்டும் என்று கேட்டு இருந்தாங்க... சிட்சூ நாய் வச்சிருக்கணும் என்று வந்துள்ளார்கள். நீங்களே அந்த நாய் குட்டியை வாங்கி வளர்க்கலாமே என்று ஆவுடை கேட்டார்.அதற்கு அந்த பெண். அந்த சிட்சு நாய் குட்டி ஆரம்ப விலையே 50000 ரூபாய் வரும். அது பார்க்க மிகவும் அழகாக இருக்கும்" இவ்வாறு கூறினார்.

A Gen Z woman dreams of a 2L salary her own house a BMW car a Ninja bike and a Shih Tzu dog

இன்னும் சில பெண்களின் எதிர்பார்ப்பும் ஆச்சரியமாக இருந்தது. K டிராமாவில் வருவது கணவன் என்னை பார்த்துக்கணும், என் கல்யாணத்துக்கு முதல்வர் வரணும். 200 பவுன் நகை போட வேண்டும். வரப்போகும் மாப்பிள்ளை 50 பவுன் எனக்கு போடணும். 2 லட்சம், 3 லட்சம் சம்பளம் இருக்கணும், வீடு இருக்கணும், , கல்யாணம் five-star ஹோட்டலில் நடக்கணும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகளை தெரிவித்தனர்.

எல்லாம் சரி, ஒரு basic கேள்வி. 2-3 லட்சம் சம்பளம் வாங்குறவன் ஏன் உங்களை கல்யாணம் பண்ணனும்? என்று நெட்டிசன் கேட்டுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இன்னொரு நெட்டிசன், ரெண்டு லட்சம் சம்பளம் வாங்குறவன் நீங்க சொல்ற சொந்த வீடு, பிஎம்டபிள்யூ காரு, நிஞ்சா பைக்கு, அந்த சிட்சு நாய் எல்லாம் வாங்கி மெயின்டெய்ன் பண்ணும்னா சம்பளம் வந்த அன்னிலருந்து பிச்சை தான் எடுக்கனும் என்று விமர்சித்துள்ளார்.

அதேபோல் எக்ஸ் தள பக்கத்தில் டீக்கடையார் என்ற பெயரில் இருக்கும் எழுத்தாளர் முரளி வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 25 ஆண்டுகளில் உருவான அதிகமான சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் இருபாலருக்கும் கிடைத்த வேலை வாய்ப்புகள் இதற்கு ஒரு காரணம். இரண்டு பேர் வேலைக்கு போகும் வீடுகளில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று வளர்ப்பது கடினம் என்று பலர் நிறுத்தி விட்டார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த அட்வான்டேஜ் என்னவெனில்,

மூன்று பேர் உள்ள குடும்பம் மட்டுமே. அதிகம் செலவு செய்யாமல் இருந்தால் அந்த பெண் வளரந்து திருமணத்திற்கு தயாராகும் பொழுது, அவர்கள் வசிக்கும் வீடு போக வாய்ப்பு இருந்தால் இன்னொரு வீடு, சில காலி மனைகள், சேமிப்பில் 100 பவுன் நகை என சொத்து 25 ஆண்டுகளில் சேர்ந்து விடுகிறது. இன்னொன்று இரண்டாயிரத்தில் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு (எல்லோருக்கும் அல்ல) தங்கள் வீட்டில் இருந்தும் சொத்து கொஞ்சம் கிடைத்தது.

அதனுடன் அவர்கள் சம்பாதித்த பணமும் சேரும்பொழுது அதுவும் 2000 இலிருந்து 2010க்குள் இடங்கள் வாங்கி போட்டிருந்தால் நகைகள் வாங்கி போட்டிருந்தால் அது இன்று பெரிய சொத்தாக வளர்ந்து இருக்கிறது. எனவே பெண்கள் அதற்கு ஏற்றார் போல எதிர்பார்க்க ஆரம்பிக்கிறார்கள். நான் ஒரே பெண் கோடிக்கணக்கான சொத்துடன் வருகிறேன். மாப்பிள்ளையும் அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வந்து இருக்கிறது" இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+