டிரைவர் அதிமுகக்காரர்.. அதனால்தான் பேசின் பிரிட்ஜ் மழைநீரில் பஸ் சிக்கியது! திமுக கவுன்சிலர் ஒரேபோடு
சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் மூலகொத்தளம் ரயில்வே மேம்பாலாத்தில் தேங்கி நின்ற மழை நீரில் அரசு பேருந்து சிக்கிய சம்பவம் பேசுபொருளானது. இது குறித்து விளக்கமளித்த அப்பகுதி திமுக கவுன்சிலர், "பேருந்து ஓட்டுநர் அதிமுக கட்சியை சேர்ந்தவர்" என குற்றம்சாட்டியுள்ளார்.
சுரங்க பாதையில் மழைநீர்: தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையிலும் மழை நீடித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழை நின்றவுடன் நீர் முற்றிலுமாக வடிந்துவிட்டது. அதேபோல சுரங்கபாதையில் மழை நீர் தேங்காதவாறு மோட்டார் அமைத்து மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றி வருகின்றனர்.

சிக்கிய பேருந்து: இப்படி இருக்கையில் சென்னை மூலகொத்தளம் ரயில்வே மேம்பாலத்தில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக நீர் தேங்கியிருந்திருக்கிறது. அப்போது அவ்வழியாக வந்த பேருந்து சுரங்கபாதையை கடக்க முயல்கையில், மழைநீரில் சிக்கியிருக்கிறது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் பேருந்து அங்கிருந்து கொஞ்சம் கூட நகரவில்லை. இதனையடுத்து பேருந்தை மீட்க அதிகாரிகள் முயன்று வந்திருக்கிறார்கள்.
அதிமுக டிரைவர்: இது குறித்து விளக்கமளித்துள்ள திமுக கவுன்சிலர், "பேருந்து ஓட்டுநர் அதிமுக கட்சியை சேர்ந்தவர்" என குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, "சுரங்கப்பாதையில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற 3 மோட்டார்கள் செயல்பட்டு வருகின்றன. பம்ப் ஆப்ரேட்டர்கள் நேற்றிலிருந்து இங்கே இருந்து வேலை செய்து வருகிறார்கள். இங்கு தண்ணீர் தேங்கி இருக்கிறது என்பது தெரிந்தும் டிரைவர் பஸ்ஸை உள்ளே விட்டிருக்கிறார். அவர் அதிமுக டிரைவர் வேண்டும் என்றே பழி வாங்க இப்படி செய்திருக்கிறார்" என கவுன்சிலர் வேளாங்கண்ணி கூறியுள்ளார்.
கோரிக்கை: இதனையடுத்து பேருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் மற்ற சுரங்கபாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோன்ற நடவடிக்கையை பேசின் பிரிட்ஜ் மூலகொத்தளம் பகுதியிலும் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
நீடிக்கும் மழை: நிலைமை இவ்வாறு இருக்கையில் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது இன்று மழையை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் நாளை, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 24ம் தேதியை பொறுத்த அளவில் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications