பஸ் படியில் தொங்கி கீழே விழுந்த மாணவன்.. ஏறி இறங்கிய டயர்.. துண்டான கால்கள்.. அலறிய சென்னை
சென்னை: குன்றத்தூரில் கூட்ட நெரிசல் காரணமாக அரசு பேருந்து படியில் பயணம் செய்த பள்ளி மாணவன் தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். சாலையில் விழுந்ததில் பேருந்தின் பின் சக்கரம் மாணவனின் காலில் ஏறியதால் அவரது கால்கள் துண்டாகின.
குன்றத்தூர் அருகே கொல்லச்சேரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் பயின்று வந்த மாணவர் ஒருவர் இன்று மாலை அரசு பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். பேருந்தில் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் முன்பக்கத்தில் படியில் தொங்கியவாறு பயணித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி விழுந்திருக்கிறார்.

இதனால் பேருந்தின் பின் சக்கரம் மாணவர் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் மாணவனின் கால்கள் இரண்டும் துண்டாகியுள்ளன. இதனையடுத்து அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். இச்சம்பவம் சென்னை குன்றத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்து கீழே இறக்கி விட்டது சர்ச்சையான நிலையில் இன்று மாணவன் கீழே விழுந்து விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications