ஐயா.. நேசமணி நீ நல்லபடியா வரனும்.. இதுதான் உண்மையான Pray for Nesaman பாட்டியின் வைரல் வீடியோ!
சென்னை: நேசமணி என்பவர் உண்மையிலேயே அடிப்பட்டு கிடப்பதாக நினைத்து பாட்டி ஒருவர் படு சீரியஸாக பேசும் வீடியோ வைரல் ஆகியுள்ளது.
பிரன்ட்ஸ் பட காமெடி கதாப்பாத்திரமான நேசமணியை நெட்டிசன்கள் வைரலாக்கியுள்ளனர். உலகளவில் ட்ரென்டிங் ஆகியுள்ள நேசமணி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
இதனால் மோடி சர்க்கா2 என்ற ஹேஷ்டேக் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. நேசமணி உண்மையான நபர் என எண்ணி Pray For Nesamani என்ற ஹேஷ்டேக்கை டிவிட்டரில் டிட்ரென்ட்டாக்கியுள்ளனர்.

காண்டிராக்டர்
பலரும் தங்களின் பெயருக்கு முன்னால் சவுகிதாரை போல காண்டிராக்டர் என சேர்த்துள்ளனர். ஏராளமானோர் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு நேசமணியை வச்சு கிண்டல் செய்து வருகின்றனர்.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்
நேசமணி மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்துள்ளார். இதனால் மீம்ஸ் கிரியேட்டர்களும் அவரவர்களுக்கு ஏற்றதுபோல் நேசமணியை பயன்படுத்தி வருகின்றனர்.

கிருஷ்ணமூர்த்திக்கு எச்சரிக்கை
இந்நிலையில் பாட்டி ஒருவரின் வீடியோ வைரலாகியுள்ளது. அதில் அந்தப் பாட்டி, நேசமணியின் தலையில் சுத்தியலை போட்ட கிருஷ்ணமூர்த்தியை எச்சரிக்கிறார். மேலும் நேசமணி குணமாகி வீடு திரும்பிட பயங்கர சீரியஸாக சாமிகளை வேண்டி கொள்கிறார்.

குணமாகி வரவேண்டும்
மேலும் நேசமணி குணமாகி திரும்பி வரும் போது தனக்கு ஒரு சேலை வாங்கித்தர வேண்டும் என்றும் தன்னை காப்பாற்ற வேண்டும் என்றும் அந்தப் பாட்டி கோரிக்கை விடுகிறார். எத்தனையோ பிரச்சனைகள் இருக்க ஒன்றும் இல்லாத நேசமணி விஷயத்திற்காக நெட்டிசன்கள் மெனக்கெட்டு வருகின்றனர்.
|
பதறிய பாட்டி
யாரோ ஒருவர் மொட்டையாக நேசமணி குறித்து பேச, பதறிப்போய் பாட்டி, வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.












Click it and Unblock the Notifications