ஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் செயல்படுகிறது.. காங்.எம்பி மாணிக்கம் எச்சரிக்கை

திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் திமுக இடையிலான சண்டை பூதாகரமாகி உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு திமுக தலைவர்கள் அடுத்தடுத்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். திமுகவிற்கு காங்கிரஸ் தரப்பை சேர்ந்த தலைவர்களும் பதிலடி அளித்து வருகிறார்கள்.

துரைமுருகன் என்ன சொன்னார்

துரைமுருகன் என்ன சொன்னார்

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்,என்றார் .

பதிலடி

பதிலடி

இதற்கு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு தோழமையை பற்றி யாரும் சொல்லி கொடுக்க அவசியம் இல்லை. காங்கிரஸ் கட்சி எப்போதும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றியது கிடையாது. காங்கிரஸ் கட்சி குறித்தும், கூட்டணி தர்மம் குறித்தும் திமுகவிற்கு தெரியவில்லை.

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் எப்படி

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை துரைமுருகன் சரியாக படிக்க வேண்டும். ஸ்டாலினை முதல்வராக்க கூடாது என திமுகவில் ஒரு கூட்டம் உள்ளது. ஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது, என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

வார்த்தை போர்

வார்த்தை போர்

காங்கிரஸ் திமுக இடையில் நடக்கும் இந்த வார்த்தை போர் மொத்தமாக கூட்டணியை உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் கூட்டணி இப்போது உடையவில்லை என்றாலும் கூட, சட்டசபை தேர்தலின் போதோ, நகராட்சி இடைத்தேர்தலின் போதோ, பேச்சுவார்த்தை சமயத்தில் கண்டிப்பாக உடைய வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

Take a Poll

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+