ஹெட் மிஸ்ட்ரஸுக்கு அவ்வளவு வெறி.. இளம் ஆசிரியையை அடைத்து பாலியல் வன்கொடுமை? கடித்து வைத்த கொடூரம்!
சென்னை: சென்னையில் தனது பள்ளியில் பணிபுரியும் இளம் பெண் ஆசிரியையை, அரையாண்டு தேர்வுக்காக ஆலோசிக்க வேண்டும் என வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரது உடலின் பல இடங்களில் கடித்து வைத்த தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உடலில் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து காயத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடலில் பல இடங்களில் கொடூரமான காயங்களும் கடித்து வைத்த தடயங்களும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதை எடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்ற போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியானது. அந்த ஆசிரியை பணிபுரியும் பள்ளியில் பணி புரியும் 40 வயதான சங்கீதா என்பவர் அரையாண்டு தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் எனவே தனது வீட்டுக்கு வரவேண்டும் என கூறியுள்ளார். இதை அடுத்து அந்த ஆசிரியை தலைமை ஆசிரியையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
தொடர்ந்து தலைமை ஆசிரியை அந்த இளம் ஆசிரியைக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அதனை குடித்தவுடன் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்து எழுந்த போது உடல் எல்லாம் காயங்கள் இருந்திருக்கிறது. இதனால் அலறிய அவர் வீட்டிலிருந்து தப்ப முயன்றுள்ளார். இதை அடுத்து தலைமை ஆசிரியை அந்தப் பெண்ணை அடித்து உதைத்து வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளார். தொடர்ந்து வீட்டிலிருந்த செல்போன் மூலம் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்தே இளம் பெண் ஆசிரியை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் மகளிர் காவல் துறையினர் தலைமை ஆசிரியை சங்கீதாவின் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் தலைமை ஆசிரியை பள்ளியிலேயே பலமுறை பாலியல் ரீதியாக பேசியுள்ளார். இந்நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்துள்ளார்.
சம்பவத்தன்று இருவரும் வீட்டிலிருந்த நிலையில், குளிர்பானத்தில் மதுவை கலந்து குடிக்க வைத்து மயக்கமடைய செய்துள்ளார். தொடர்ந்து அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, உடலில் பல இடங்களில் கடித்து வைத்து கொடுமை செய்தார் என கூறினார். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நடந்தது வேறு விதமாக இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அந்த இளம் ஆசிரியைக்கும் 40 வயதான தலைமை ஆசிரியை சங்கீதாவுக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. தொடர்ந்து இருவரும் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தனிமையில் இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த போது இருவரும் ஒன்றாக மது குடித்ததும் போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் இளம் ஆசிரியையை சங்கீதா தாக்கி கடித்து வைத்தது தெரிய வந்தது.
மேலும் இரண்டு நாட்கள் வீட்டில் வைத்து கொடுமை செய்ததும் அம்பலமானது. இதை அடுத்து கைகளால் தாக்குதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சங்கீதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே நேரத்தில் சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சங்கீதா ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications