Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்பையில் ஒரு வீடு; பெங்களுரில் வீடு! சென்னையில் தனி வீடு.. நிஜத்தில் ஒரு பட்ஜெட் பத்மநாபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் தனஞ்செயன் இளம் தலைமுறை வாங்கும் சம்பளத்தைச் சேமித்து எப்படி வெற்றிபெறுவது என்பது பற்றி தனது சொந்த வாழ்க்கை மூலம் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களில் வித்தியாசமானவர் தனஞ்செயன். ஆரம்பக் காலத்தில் சினிமா துறை பற்றிய எந்த அனுபவமும் இல்லாமல் இதற்குள் வந்த இவர், தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றி புத்தகம் எழுதி அதற்காக தேசிய விருதைப் பெற்றவர். இன்றைய சமூக ஊடகங்களில் அவர் திரைத்துறை பற்றிய விமர்சனங்களைப் பேசுபவராக அதிகம் அறியப்படுகிறார்.

tamil cinema news producer dhananjayan

சூர்யா நடித்து வரும் கங்குவா பற்றிய அட்பேட், 'தி கோட்' பாக்ஸ் ஆபீஸ் வசூல் என எதைப் பற்றிப் பேசினாலும் தகவல்களை அள்ளி தருபவர். ஆனால், அவருக்கு மற்றொரு முகம் இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மும்பை, பெங்களூரு எனப் பல பகுதிகளில் வாழ்ந்தவர். சாதாரண குடும்ப பின்புலத்திலிருந்து வந்த இவர், இளம் வயதிலேயே வீடுகள் மீது அதிக ஆர்வம் உள்ளவராக இருந்துள்ளார்.

அதனால் தான் எங்கே எல்லாம் வசித்தாரோ அங்கே எல்லாம் வங்கிக் கடன் மூலம் வீடுகளை வாங்கி ஒரு ரியல் பட்ஜெட் பத்மநாபனாக வாழ்ந்து சாதித்திருக்கிறார். அவர் வெற்றிக்கதை பற்றி அவரே ஒரு யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் பல விசயங்களைப் பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், "நான் ஒரே இடத்திலிருந்ததே இல்லை. பெங்களூரில் 5 வருடம் இருந்தேன். ஹைதராபாத்திலிருந்தேன். பாம்பேயில் இருந்தேன். படித்தது முழுக்க வேறு மாநிலத்தில்தான். எனக்குப் பெங்களூரில் வீடு இருந்தது. பாம்பேயில் வீடு இருந்தது. எங்கே எல்லாம் வேலை பார்த்தேனோ அங்கே வீடு வாங்கினேன். எனக்கு ஒரு இடத்தில் வாழப் பிடிக்காது. சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என விரும்புவேன்.

நான் வெளிமாநிலத்தில் படித்ததால், நிறை தொடர்புகள் இருந்தன. வேலைகள் கூட வேறு மாநிலத்தில்தான் கிடைத்தது. எனக்கு மனைவியாக வரக்கூடியவள் அதே மாதிரி இருக்கவேண்டும் என நினைத்தேன். லலிதாவை முதன்முதலாக சந்தித்தபோது இதைச் சொன்னேன். 'நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கே நான் இருப்பேன்' என்றார். அப்போது முடிவு செய்தது இவள்தான் என் மனைவி என்று. எனக்குக் காதல் திருமணம் இல்லை. வீட்டில் பார்த்துச் செய்து வைத்த திருமணம்.

tamil cinema news producer dhananjayan

எங்களுக்கு மண்ணடியில் ஒரு வீடு இருந்தது. அப்பா வாங்கிய வீடு. அது இல்லாமல் தனியாகச் சொந்தமாக ஒரு வீடு வாங்க நினைத்தேன். முதன்முதலாக அடையாறு பகுதியில் வண்ணாந்துறையில் 2 அறை கொண்ட வீடு வாங்கினேன். அப்போது எனக்கு 30 ஆயிரம் சம்பளம். அதில் 10 ஆயிரம்தான் செலவாகும். அதை மனதில் வைத்து வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்கினேன். அடுத்த ஹைதராபாத் போன போதும் அங்கேயும் வாங்கினேன். அதுவும் வங்கிக் கடன்தான். நாங்கள் இல்லாத வீட்டை வாடகைக்கு விட்டு விடுவேன். அதை வைத்து இஎம்ஐ கட்டிவிடுவேன். அப்படி வாங்கியதுதான் என் சொத்துகள்.

நான் பொதுவாக பலருக்கும் சொல்வது ஒன்றுதான். இஎம்ஐ மூலம் சொத்து வாங்குவது தப்பே இல்லை. இன்றைய காலத்தில் இளைஞர்கள் சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே ஒரு வீட்டை வாங்க வேண்டும். அப்படி ஒரு கடன் இருந்தால்தான் நாம் தொடர்ந்து உழைப்போம். அதற்காக வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என நினைப்போம். நான் எப்போதும் சொத்து வாங்குவதற்காகக் கடன் வாங்கப் பயந்ததே இல்லை. அது தேவையற்ற பயம். சினிமாவுக்கு லோன் வாங்கும்போதுதான் பயந்து பயந்து வாங்குவேன்.

நான் பாம்பேயில் பாந்த்ரா என்ற ஏரியாவில் வாடகைக்கு இருந்தேன். அந்த வீட்டின் வாடகை ஒன்னே கால் லட்சம். இவ்வளவு பெரிய தொகையை வாடகையாகக் கொடுக்க என் மனைவிக்கு விருப்பமே இல்லை. ஒரே மாதத்தில் அதைச் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். அப்போது என் சம்பளத்தில் வாடகைக்காக 75 ஆயிரம் ரூபாய் தந்தார்கள். அதை வைத்து வீடு வாங்கிவிடலாம் என முடிவு செய்தேன். அப்படிதான் அங்கே வீடு வாங்கினேன். 10 வருடங்கள் அந்த வீட்டிலிருந்தோம். அதன்பிறகு தான் சென்னை வந்தேன். கீழ்பாக்கத்தில் தனி வீட்டில் வசித்தோம். அதுவும் சொந்த வீடுதான். என் மகள்கள் திருமணமாகி அமெரிக்கா போன பிறகு அங்கே நானும் என் மனைவியும் அவ்வளவு பெரிய வீட்டில் இருக்க ஒரு மாதிரியாக இருந்தது.

அதனால் சாலிகிராமம் பக்கம் உள்ள எங்கள் பழைய அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வந்தோம். என் மனைவி அதை விரும்பவே இல்லை. தனி வீட்டை விட்டு அபார்ட்மெண்ட் வருகிறோம் என்று அவள் கவலை. பெரிய வீட்டை நிர்வகிப்பது கஷ்டம். அதைப் புரிந்து கொண்டு இங்கேயே வந்துவிட்டோம். சாலிகிராமத்தில்தான் என அலுவலகம் இருக்கிறது. கீழ்ப்பாக்கத்திலிருந்து வருவதும் கஷ்டமாக இருந்தது. அப்படித்தான் இங்கே மாறினோம்" என்று பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+