கிராம ராஜனாக எவர்கிரீன் ராமராஜன்! ஒரே ஒரு போன் கால் தான்.. குவிந்த ரசிகர்கள்! மவுசு குறையாத ஹீரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் எவர்கிரீன் கிராம ராஜனாக வலம் வரும் ராமராஜன், தனது ஒரே ஒரு போன் கால் மூலம் மொத்த ரசிகர்களையும் சென்னைக்கு அழைத்து மாஸ் காட்டியிருக்கிறார்.

ராமராஜன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாமானியன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில், தமிழகம் முழுவதும் இருந்தும் அவரது ரசிகர்கள் பெருமளவில் பங்கேற்று ராமராஜனை பெருமைப்படுத்தியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் நடிகர் ராமராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம்

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ராமராஜன், அங்குள்ள திரையரங்கு ஒன்றில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் பணி மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பள்ளிப்பருவம் முதலே எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்த இவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களை சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கக்கூடியவர்.

 புரொடக்‌ஷன் பாய்

புரொடக்‌ஷன் பாய்


எம்.ஜி.ஆரை போல் ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்திறங்கிய ராமராஜனுக்கு காலம் அவ்வளவு எளிதாக ஏற்றத்தை கொடுக்கவில்லை. புரொடக்‌ஷன் பாயாக பணியில் சேர்ந்து தயாரிப்பாளரும், இயக்குநருமான ராமநாராயணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்தார்.
இதனிடையே நம்ம ஊரு நல்ல ஊரு என்ற திரைப்படம் மூலம் முதல்முறையாக ஹீரோவாக அறிமுகமானார் ராமராஜன்.

 கிராமத்துக் கதை

கிராமத்துக் கதை

ராமராஜனின் கிராமத்து சாயலும், கள்ளம் கபடமற்ற பேச்சும், சினிமாவில் அவருக்கென தனி கூட்டத்தை உருவாக்கியது. கூடவே அவர் அணியும் கலர் கலரான சட்டையும், உடல் மொழியும் எம்.ஜி.ஆரை. பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. ராமராஜனின் வளர்ச்சிக்கு அவர திரைப்படங்களில் இடம்பெற்ற பாடல்களும் அதற்கு இசையமைத்த இளையராஜவும் மிக முக்கிய காரணம்.

வசூல் சக்ரவர்த்தி

வசூல் சக்ரவர்த்தி

ரஜினி, கமலுக்கு இணையாக தமிழகம் முழுவதும் ராமராஜனுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகின. ராமராஜன் மன்றம் இல்லாத ஊரே இல்லை என்ற நிலை 90-களின் பிற்பகுதி வரை இருந்தது. 1989-ம் ஆண்டு முதல் 1991-ம் ஆண்டு வரையிலான மூன்று ஆண்டுகளும் ராமராஜனின் கால்ஷீட்கள் நிரம்பி வழிந்தன. வருடத்திற்கு 8 படங்கள் வரை ராமராஜனின் நடிப்பில் வெளியாகிய காலம் அது. அதிலும் கரகாட்டக்காரன் திரைப்படமெல்லாம் 500 நாட்களை கடந்தும் தமிழகத்தில் ஓடியது.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

இப்போது உள்ள தயாரிப்பாளர்களை போல் புரோமோஷன், நொடிக்கு நொடி தொலைக்காட்சிகளில் விளம்பரம் என்றெல்லாம் அந்தக்காலத்தில் எந்த தயாரிப்பாளரும் மெனக்கெட்டது கிடையாது. முழுக்க முழுக்க கதையையும், கதாநாயகனையும் நம்பி படத்தை தயாரித்தார்கள். ராமராஜனின் சென்னை சாலிகிராமம் இல்லத்தின் முன்பு அவரைக் காண கூடாத கூட்டமில்லை 90களில் தேடாத புகழும் இல்லை. இப்படிப்பட்ட ராமராஜன் அரசியல், குடும்ப பிரச்சனை என பல்வேறு காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.

 சாமானியன் திரைப்படம்

சாமானியன் திரைப்படம்

ஆனாலும் அவரது ரசிகர்களுடனான தொடர்பை மட்டும் அவர் விட்டுவிட வில்லை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவிலிருந்து மொத்தமாக விலகியிருந்த ராமராஜன் இடையே மேதை என்ற திரைப்படத்தில் மட்டும் நடித்தார். அது சொல்லிக்கொள்ளும் வகையில் வெற்றியடையவில்லை. இதனிடையே நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமானியன் என்ற திரைப்படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் ராமராஜன்.

டீசர் விழா

டீசர் விழா

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவுக்கு தமிழகமெங்கும் இருந்து ராமராஜனின் ரசிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தது தான் ஹைலைட். இந்தக் காலத்திலும் இவருக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா எனக் கேட்கும் அளவுக்கு அந்த விழாவில் மாஸ் காட்டியிருக்கிறார் ராமராஜன்.எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற ராமராஜனின் டவுசர் காஸ்டியூமும், காலமெல்லாம் அவர் அணியும் கலர் கலரான ஆடைகளும் அவரது முக்கிய அடையாளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+