தலைமைச் செயலகத்திற்குள் திடீரென கார் ஓட்டிய விஜய்.. சிறப்பு நிகழ்ச்சிக்கு பின் நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கான முக்கிய திட்டத்தையும், சேவையை துவங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் ரூ.2.90 கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களுக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனங்கள் இனி மாநிலம் முழுவதும் உள்ள ஊரகப் பகுதிகள் மற்றும் நகர்ப்புற மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முக்கியமான விஷயம் என்னவென்றால் விஜய் செய்த விஷயம் தான்.

முதலமைச்சர் விஜய் துவங்கி வைத்த இத்திட்டத்தில், புதிய ஆம்புலன்ஸ் ஜீப்களில் ஒன்றைத் தானே ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த காட்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் தலைமை செயலகத்திற்குள் உள்ளேயே இத்துறை அதிகாரிகளை அருகில் அமரவைத்து அவர் ஓட்டினார். விஜய்யின் கார் செல்ல பாதுகாப்பு அதிகாரிகளும் கார் பின்தொடர்ந்து பாதுகாப்புக்காக ஓடினர்.
இந்த 40 புதிய ஆம்புலன்ஸ் ஜீப்கள் விரைவாக பயன்பாட்டுக்கு வருவது மூலம் அரசு மருத்துவ சேவையை இன்னும் வேகமாகவும், திறன்படவும் இயங்கும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த 40 ஆம்புலன்ஸ் ஜீப்களும் அதிநவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் நோயாளிகளை பத்திரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வகையில் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மலைப்பகுதி, கிராமப்புற சாலைகளில் எளிதாகச் செல்லும் வகையில் இந்த ஜீப்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய் இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவத் துறை அதிகாரிகளுடன் உரையாடினார். மக்களுக்கு தேவையான மருத்துவ சேவை எந்த இடத்திலும் தாமதமின்றி சென்றடைய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இப்புதிய 40 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் ஊரக சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கப்படும். இதனால் கிராமப்புற மக்களின் உயிர் ஆபத்து கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் அரசின் தொடர் முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்த நிலையில் நேற்று தலைமை செயலக அதிகாரிகளுக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியானது. தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகத்துக்கு வந்து, உடனடியாக தங்கள் இருக்கையில் பணியைத் தொடங்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் 40க்கும் மேற்பட்ட துறைகளில் 5,500க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான பணி நேரம் என்பது காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை மட்டுமே. ஆனால் பல ஊழியர்கள் காலதாமதமாக வந்து, பணியை தாமதமாகத் தொடங்குவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது.
இதை சரி செய்யும் பொருட்டு தலைமைச் செயலக அதிகாரிகளுக்கு முதல்வர் வாயிலாக ஒரு வாய்மொழி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளனர். அதன்படி, காலை 10 மணிக்கு முன்பாகவே அலுவலகத்துக்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, சரியாக 10 மணிக்கு பணியைத் தொடங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று அதிகாரிகளும் காலை 9.30 மணிக்கே வர துவங்கி 10 மணிக்குள் பெரும்பாலான அதிகாரிகள் பணிகளை துவங்கினர். இது பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications