ஜூன் 29 - ஜூலை 5 வார ராசிபலன்: மிதுன ராசிக்கு பணவரவு, சொத்து யோகம்... ஆனால் இந்த விஷயத்தில் கவனம்!
Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்திற்கு பிரவேசமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசியினருக்கு அருமையான காலகட்டம். தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். பல ஊர்களுக்குப் பயணம் செய்யக்கூடிய யோகம், வாய்ப்பு ஏற்படும். அப்பாவின் சொத்துகள், மூதாதையர்கள் சொத்துகள் கிடைக்கும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் புதன் வக்கிரமாக இருப்பதால் பல ரகசியங்கள் உங்கள் வாயில் இருந்து வருவதற்கான வாய்ப்பு ஏற்படும். மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
கவனம்
மேலதிகாரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகம், தொழில் ரீதியான விஷயங்களில் நம்பிக்கையும், சந்தோஷமும் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அனுமன் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நரம்பு, பிரஷர் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பாதிப்புகளில் கவனமாக இருக்க வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் அற்புதம் ஏற்படும்.
முன்னேற்றம்
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படுவது, ஆவேசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. படிக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நம்பிக்கையும், ஏற்றங்களும் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
சங்கடம் தீரும்
தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் தவிடு பொடியாகும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் இணக்கமாக செல்வது, அவசரப்பட்டு கோபப்படுவது, பேப்பர் போடுவது போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.
வழிபாடு
குடும்பத்தில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாக்குறுதிகளை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பண வரவுகள் தாரளமாக இருக்கும். கழிவுப் பாதையில் பிரச்சனைகள் வந்து சரியாகக்கூடிய அமைப்பு உள்ளது. சந்தோஷம் 75 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் நன்றாக இருக்கும். குருவாயூர் கிருஷ்ணர் வழிபாடு முன்னேற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications