ரிஷப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளும் நேரம்.. சொத்து சேரும் யோகம்.. இந்த வாரத்தில் வரும் சூப்பர் மாற்றம்
Weekly Rasi Palan: ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்திற்கு பிரவேசமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 29 முதல் ஜூலை 5 ஆம் தேதி (ஆனி 15 முதல் 21 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷப ராசியினருக்கு உத்தியோக ரீதியாக காணப்பட்டிருந்த சிக்கல் பரிபூரணமாக நிவர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றக்கூடிய அற்புதமான அமைப்பு உண்டாகும். செல்வாக்குகள் கூடும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் காணப்பட்டிருந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய யோகம் ஏற்படும்.
சவால் தீரும்
நிறைய நன்மைகள் நடக்கும் அமைப்பு உள்ளது. தொழில் ரீதியாக இருந்து வந்த பதட்டங்கள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பலவிதமான பிரச்சனைகள், சவால்கள் தீரும். தொழில், உத்தியோகம், பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் ஏற்படும். புதிய முதலீடுகள், முயற்சிகள் அனுகூலத்தைத் தரும். அடிபடாமல், காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்வது.
முயற்சிகளில் வெற்றி
சிறிய சிறிய விஷயங்களுக்கு டென்ஷனாவதை தவிர்ப்பது நல்லது. கணவருடைய உடல்நிலை, கண், முகம் பகுதிகளில் வரும் பாதிப்புகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். ஆவணங்கள் தொடர்பான விஷயங்கள் தடைபட்டு நடக்கும். நண்பர்கள், உறவினர்கள் சேரக்கூடிய யோகம் உண்டாகும். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் நீங்கள் சொல்வதை மற்றவர்கள் கேட்கும் அமைப்பு உண்டாகும்.
ஆரோக்கியம்
காது, மூக்கு, தொண்டை, சைனஸ், ஒற்றை தலைவலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டாகும். மன அழுத்தம் தீரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். துர்க்கை வழிபாடு முன்னேற்றத்தையும், அனுகூலத்தையும் ஏற்படுத்தும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், மூத்த பிள்ளைகளின் உடல்நிலையைப் பார்த்துக் கொள்வது நல்லது. பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. உடல் சூடு அதிகரிக்கும். சந்தோஷம் 90 சதவீதமும், பொருளாதார ஏற்றம் 80 சதவீதமும் ஏற்படும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications