டெல்லி லாபியை ஆக்டிவேட் செய்த சுதீஷ்.. தேமுதிகவின் எதிர்பார்க்காத மூவ்.. திமுகவிற்கு ஷாக் மேல் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகளும், அதையொட்டிய பேரம் பேசுதல்களும் எப்போதும் சுவாரசியமானவை. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) எடுத்த அரசியல் முடிவு, அக்கட்சிக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் நீண்ட கால ஆசையாக இருந்தது ஒரு நாடாளுமன்ற மேலவை (ராஜ்யசபா) எம்பி பதவி.

முன்னதாக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது, இந்த ராஜ்யசபா சீட் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், இரு கட்சிகளுமே தேமுதிகவின் இந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டன. இந்த நிலையில்தான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வியூகமாக தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்தார். தேர்தல் உடன்பாட்டின்படி, தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது.

DMDK MP LK Sudhish

வாக்குறுதி அளித்தபடி திமுக தரப்பில் ஒரு ராஜ்யசபா சீட் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்தப் பதவியில் தனது தம்பி எல்.கே.சுதீஸை அமரவைத்தார் பிரேமலதா விஜயகாந்த். திமுக எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மை ஆதரவோடுதான் சுதீஸ் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்வாகி டெல்லிக்குச் சென்றார்.

ஆனால், எம்பி பதவியேற்ற பிறகு சுதீஸ் நாடாளுமன்றத்திலோ அல்லது தமிழக அரசியல் தளத்திலோ பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை, சத்தமே இல்லாமல் இருக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. இது குறித்து தேமுதிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது சில அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுகவின் தயவால் எம்பி பதவியைப் பெற்றிருந்தாலும், சுதீஸின் தற்போதைய அரசியல் பார்வை வேறு திசையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக, திமுகவின் பிரதான அரசியல் எதிரியான பாஜகவின் டெல்லி மேலிடத்துடன் நெருக்கமான நட்பு வளையத்தை உருவாக்க சுதீஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் முதற்கட்டமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை "மரியாதை நிமித்தமாக" நேரில் சந்தித்துப் பேச சுதீஸ் விரும்பியுள்ளார். இதற்காக அமித்ஷாவின் டெல்லி அலுவலகத்தில் நேரமும் (Appointment) கேட்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் தேமுதிக - பாஜக கூட்டணியில் இருந்த பழைய நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் நோக்கில் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், இப்போது வரை அமித்ஷா தரப்பிலிருந்து சுதீஸைச் சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரது டெல்லி ப்ளான் இன்னும் 'சக்ஸஸ்' ஆகாமல் இழுபறியிலேயே நீடிக்கிறது.

இருப்பினும் சுதீஸ் தனது முயற்சியைக் கைவிடவில்லை என்றும், அமித்ஷாவின் கவனத்தை ஈர்க்க தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மூலமாக காய்களை நகர்த்தி வருவதாகவும் தேமுதிக உட்கட்சி வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன. எல்.முருகன் மூலமாக டெல்லி மேலிடத்திற்குத் தூது அனுப்பி, எப்படியாவது அமித்ஷாவை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

திமுகவின் பலத்தால் எம்பியாகிவிட்டு, இப்போது பாஜகவின் ஆதரவைத் தேடி சுதீஸ் டெல்லியில் வலம் வருவது தமிழக அரசியல் அரங்கில், குறிப்பாக திமுக கூட்டணி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெல்லி லாபி தேமுதிகவின் எதிர்கால அரசியல் நகர்வை எங்கு கொண்டு போய் நிறுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+