ஆளும் திமுக நினைத்தே பார்த்திராத பிரஸ்மீட்.. டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமி இணைய 4 காரணங்கள்
சென்னை: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தமிழக அரசியலில் யாரும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய திருப்பமாக டிடிவி தினகரன் (அமமுக) மற்றும் எடப்பாடி பழனிசாமி (அதிமுக) இடையிலான அரசியல் இணக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதை பத்திரிக்கையாளர்ளே நினைத்து பார்க்காத கொரியன் பட ட்விஸ்ட் போல இருந்தது. ஆளும் திமுக கூட்டணி சற்று எதிர்பார்க்காத ஒரு திருப்பமாக இதனை அரசியல் விமர்சகர்கள் பார்க்கிறார்கள்.
ஏனெனில் டிடிவி தினகரனும், எடப்பாடி பழனிசாமியும் பல ஆண்டுகளாகக் கடும் அரசியல் எதிரிகளாக இருந்தார்கள். 2017ம் ஆண்டு முதல் எதிரிகளாக இருந்தவர்கள்.. இனி சேருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கசப்புகளை மறந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) ஒன்றாகக் கைகோர்த்துள்ளனர். இந்தத் திடீர் மாற்றத்திற்கான முக்கியக் காரணங்கள் பல காரணங்கள் இருந்தாலும்.. நான்கு காரணங்கள் தான் பிரதானம்.

காரணம் ஒன்று
பிரதமர் மோடியின் நேரடித் தலையீடு : இந்த இணைப்பிற்கு மிக முக்கியமான உந்துசக்தியாக இருந்தது பாஜக தேசிய தலைமை. 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டுமெனில், அதிமுக வாக்குகள் சிதறக் கூடாது என்பதில் பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் உறுதியாக இருந்தார்கள். ஒருங்கிணைந்த அதிமுகவை வைத்தே தங்களது சித்தாந்த எதிரியான திமுகவை வீழ்த்த முடியும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. அதனால் தான் மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் ஒரே மேடையில் தோன்றினார்கள். இது தான் இந்த இணக்கத்தின் உச்சக்கட்டமாகும்
காரணம் இரண்டு
"பங்காளிகள்" - புதிய அரசியல் முழக்கம்நேற்று வரை ஒருவரை ஒருவர் "துரோகி" என்று விமர்சித்துக் கொண்டவர்கள், தற்போது தங்களை "பங்காளிகள்" என்று அழைத்துக்கொள்கிறார்கள், டிடிவி தினகரன் பேசும் போது, "குடும்பச் சண்டையில் சமரசம் செய்துகொள்வது பலவீனம் அல்ல; அது தமிழகத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு" எனத் தெரிவித்தார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு படி மேலே போய், திமுகவின் "குடும்ப அரசியலை" வீழ்த்தவும், "அம்மாவின் பொற்கால ஆட்சியை" மீண்டும் கொண்டு வரவும் தினகரனை வரவேற்பதாகக் கூறி கசப்புகளை மறந்துள்ளார்.
காரணம் மூன்று
திமுக எதிர்ப்பு என்ற பொதுவான இலக்குஆளும் திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதே இருவருக்குமான பொதுவான தேவையாக இருக்கிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை அமமுக பிரிப்பதைத் தடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியம் என்பதை எடப்பாடி பழனிசாமி கடந்த 2021ம் ஆண்டு தேர்தல் முடிவுக்கு பின்னர் உணர்ந்துள்ளார். அதேபோல், தனித்து நின்று வாக்குகளைப் பிரிப்பதை விட, ஒரு பலமான கூட்டணியில் இருந்து தனது இருப்பைத் தக்கவைக்க தினகரனும் முன்வந்துள்ளார்.
காரணம் நான்கு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் தூது : தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், சென்னையில் டிடிவி தினகரனை நேரில் சந்தித்துப் பேசியது இந்த இணைப்பை உறுதிப்படுத்தியது. "பழைய கசப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு பெரிய இலக்கிற்காக இணையுங்கள்" என்ற டெல்லியின் செய்தியை இருவரும் ஏற்றுக்கொண்டனர்.
தற்போதைய அரசியல் நிலவரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணி முக்கியத் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோரின் முதன்மை இலக்கு2026-ல் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது தான். தென் மாவட்டங்களில் அமமுக - அதிமுக தொண்டர்கள் இணைவது பெரும் பலமாகக் கருதப்படுகிறது."துரோகிகள் என்பதில் இருந்து பங்காளிகள் என்ற நிலைக்கு மாறியுள்ள இந்த உறவு, 2026 தேர்தல் களத்தை ஒரு மும்முனைப் போட்டியாக (திமுக கூட்டணி vs அதிமுக-பாஜக-அமமுக கூட்டணி vs விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகம்) மாற்றியிருக்கிறது. இதில் எடப்பாடி டிடிவி அணியில் ஓபிஎஸ் இடம் பெறுவார் என்றே கூறப்படுகிறது. அப்படி நடந்தால் கிட்டத்தட்ட பழைய அதிமுகவாக வந்ததாக இருக்கும்.
தவெக நிலைப்பாடு
இப்போது அதிமுகவிற்கு உள்ளே இன்னொரு பெரிய சவால் தவெக. திமுக எதிர்ப்பு வாக்குகளை கணிசமாக விஜய் பிரிப்பார் என்று நம்பப்படுகிறது. அப்படி பிரித்தால் அது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை வெகுவாக பாதிக்கும். எனவே எப்படியாவது விஜய்யை தங்கள் பக்கம் கொண்டுவர பாஜக அதிமுக விரும்புகின்றன. இன்னமும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே உள்ளன. எனவே கொரியன் படத்தில் வருவது போல் திடீர் ட்விஸ்ட்கள் நடந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
-
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications