சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இலை... பாமகவுக்கு இத்தனை தொகுதிகளா ... பட்டியலை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது.

இந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி உள்பட 21 இடங்களில் பாமக போட்டியிடுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

எடப்பாடியார் போட்டியிட போவது எடப்பாடியார் போட்டியிட போவது "இங்கு"தான்.. அதிரடி பட்டியல்... விஐபிகளுக்கும் சீட்.. கலக்கும் அதிமுக!

 களைகட்டியுள்ள தேர்தல்

களைகட்டியுள்ள தேர்தல்

தமிழக சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணியையும் இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெறுவது தெரிந்த ஒன்றுதான். வி.சி.,க. இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இடம் பெரும் என தெரிகிறது.

பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு

பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு

அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக, தேமுதிக கூடுதல் சீட் கேட்டு காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் பாமக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. இது தொடர்பாக பாமகவுடன் தமிழக அமைச்சர்கள் பலகட்டம் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

அடம் பிடிக்கும் முரசு

அடம் பிடிக்கும் முரசு

இதனால் பாமக இடம்பெறுவதும் ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஆனால் தேமுதிக நிலைமைதான் சிக்கலாக உள்ளதாக தெரிகிறது. கூடுதல் சீட் கேட்டு முரசு அடம்பிடிப்பதால் பேச்சுவார்த்தை இழுபறி என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்கி, தேமுதிகவை தன் பக்கம் இழுக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது.

உலா வரும் உத்தேச பட்டியல்

உலா வரும் உத்தேச பட்டியல்

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பட்டியல் உலா வருகிறது. இந்த பட்டியலின்படி அதிமுக 171 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 21 இடங்களிலும், பாஜக 20 இடங்களில் போட்டியிடுவதாக இந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக 14, தமாகா 5, மற்ற கூட்டணி கட்சிகள் மூன்றில் போட்டி யிடுவதாகவும் இணையத்தில் உலா வரும் அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

பாமகவுக்கு இத்தனை இடங்களா?

பாமகவுக்கு இத்தனை இடங்களா?

இந்த உத்தேச பட்டியலில் பாமகவுக்கு 21 இடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதாவது மாதவரம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, காட்பாடி, செஞ்சி, பண்ருட்டி, ஜெயங்கொண்டம், தருமபுரி, திட்டக்குடி(தனி), பொன்னகரம், திருக்கோவிலூர், குறிஞ்சிப்பாடி, அணைக்கட்டு, பூந்தமல்லி(தனி), கீழ் பென்னாத்தூர், பரமத்தி வேலூர், திருப்பத்தூர்(வேலூர்), அரவக்குறிச்சி, பாபநாசம், வந்தவாசி(தனி), மன்னார்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியர் இட ஒதுக்கீடு என்னும் ஆயுதம்

வன்னியர் இட ஒதுக்கீடு என்னும் ஆயுதம்

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் அதிமுக தலைமை தொகுதியை முடிவு செய்து விட்டதாக இந்த பட்டியல் உலா வருகிறது. எது எப்படியோ இந்த பட்டியலில் உள்ளபடி அதிமுக, பாமகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்கினால் அது, பாமக வன்னியர் இட ஒதுக்கீடு ஆயுதத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படும். ஆனால் உண்மையிலேயே தொகுதி நிலவரத்தில் இரட்டை இலை, மாம்பழத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. உண்மை நிலவரம் என்னவென்பது விரைவில் தெரிந்து விடும். பொருந்திருந்தது பார்ப்போம்.

English summary
A list of AIADMK candidates and the proposed parties contesting the Assembly elections is circulating
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X