இதுமட்டும் நடந்தது கேம் ஓவர்? எடப்பாடி அணியில் எகிறிய பிபி! ஒரே டென்சன்! ஓபிஎஸ்ஸுக்கு புது நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் தொடங்க உள்ள அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பை டென்சனாக்கி உள்ளதாம். முக்கியமான சில காரணங்களால் இந்த வழக்கில் பின்னடைவை சந்தித்து விடுவோமோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு இருக்கிறதாம்.

அதிமுக பொதுக்குழு கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழு நடந்து கிட்டத்தட்ட 1 மாதம் ஆக போகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடுத்தது.

ஜூலை 13ம் தேதி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்த பொதுக்குழு நடந்து உள்ளது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், எல்லை மீறி பொதுக்குழுவை கூட்டி அதில் எல்லை மீறி முடிவை எடுத்து உள்ளனர். கட்சியின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு வழக்கில் எங்கள் கையை கட்டிபோட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை அனுமதித்துவிட்டது என்று கூறி, எங்கள் வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. இந்த பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதியிலேயே விதி மீறல்கள் உள்ளன .

என்ன சொன்னது?

என்ன சொன்னது?

உச்ச நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் மதிக்கவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து விதியை மீறி நீக்கி உள்ளனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைத்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், இதை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. பொதுக்குழு நடத்துவது பற்றி நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

தனி நீதிபதி

தனி நீதிபதி

இந்த கடைசி வரிதான் வழக்கில் முக்கியமானதாக மாறி உள்ளது. பொதுக்குழு நடத்துவது பற்றி நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதனால் இந்த வழக்கில் எந்த சிக்கலும் கட்டுப்பாடும் இன்றி உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த முடியும். கடந்த முறை பொதுக்குழுவிற்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உச்ச நீதிமன்றமே பொதுக்குழுவிற்கு அனுமதி கொடுத்த பின் நான் எப்படி தடை விதிக்க முடியும் என்று கூறினார்.

அடிப்படை தீர்ப்பு

அடிப்படை தீர்ப்பு

அந்த அடிப்படையில்தான் அவர் பொதுக்குழு நடத்த அனுமதியும் வழங்கினார். ஆனால் இப்போது அந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பே இல்லாமல் போய் விடுக்கிறது. இதனால் வழக்கு மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்பட உள்ளது. இந்த முறை வேறு தனி நீதிபதி முன் வழக்கு விசாரிக்கப்படும். இதில் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் வரலாம். இதுதான் தற்போது எடப்பாடி தரப்பை டென்ஸனாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கேம் ஓவர்

கேம் ஓவர்

ஏனென்றால் அதிமுக விதிப்படி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் கூட்ட முடியும். அப்படி இருக்கும் போது பொதுக்குழுவை நடத்தியதே தவறு என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் வைக்க உள்ளது. இந்த வாதத்தை வைத்து பொதுக்குழுவை செல்லாது என்று அறிவிக்க ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு எதுவும் இல்லாததால் தீர்ப்பு இந்த முறை தங்களுக்கு சாதகமாக வரும் என்று ஓபிஎஸ் தரப்பு நம்பிக்கையாக இருக்கிறதாம்.

எடப்பாடி

எடப்பாடி

ஆனால் தீர்ப்பில் பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் மொத்தமாக கதையே மாறிவிடும். பொதுக்குழுவே செல்லாது என்றால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும் செல்லாது. அதாவது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி நீடிக்க முடியாது. அவர் கட்சியில் இருந்து நீக்கியதாக வெளியிட்ட அறிவிப்பு எதுவும் செல்லாது. முக்கியமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் நீடிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விரைவில் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+