சசிகலா அறிவிப்பு டிரெய்லர்தான்.. இனிதான் மெயின் பிக்சர்.. தயாராகும் தூது.. விரைவில் பெரிய திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என்று சசிகலா அறிவித்த நிலையில் தமிழக அரசியலில் விரைவில் எதிர்பாராத திருப்பம் ஒன்று நடக்க போவதாக தகவல்கள் வருகிறது. யாருமே நினைத்து பார்க்க முடியாத திருப்பமாக இது இருக்கும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

தமிழக அரசியல் எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாத ஒன்று. தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழக அரசியலில் எப்போதும் எதாவது டிவிஸ்ட் நடந்து கொண்டே இருப்பது வழக்கம்.

அதிலும் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பின் நாளுக்கு நாள் தமிழக அரசியல் சூடாக சென்று கொண்டு இருக்கிறது. சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆன நாளில் இருந்து "ஹை பிளேமில்" வைத்த எண்ணெய் சட்டி போல தமிழக அரசியல் தகித்துக் கொண்டு இருக்கிறது.

 விலகல்

விலகல்

இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக நேற்று அரசியலை விட்டே ஒதுங்குகிறேன் என்று சசிகலா வெளியிட்ட அறிக்கை அமைந்தது. நேற்று சசிகலா இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று யாருமே நினைத்து கூட பார்க்கவில்லை. திரிஷ்யம் 2 படத்தில் கூட இப்படி ஒரு திருப்பம் நடந்து இருக்காது. அமமுக தரப்பிற்கும் இந்த அறிவிப்பு ஷாக்கிங்காகவே இருந்தது.

ஷாக்

ஷாக்

ஆனால் சசிகலாவின் இந்த அறிவிப்பு வெறும் டிரெய்லர்.. இனிமேல்தான் கதையே தொடங்க போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள். ஆம் சசிகலா இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் முக்கிய மாற்றங்கள் நடக்க போவதாக கூறுகிறார்கள். சசிகலாவின் இந்த விலகல் அறிவிப்பால் தற்போது அதிமுக தரப்பு சந்தோஷத்தில் இருக்கிறது.

சந்தோசம்

சந்தோசம்

மொத்த அதிமுக கேம்பும் இதனால் உற்சாகத்தில் துள்ளிக்கொண்டு இருக்கிறது. வாக்கு பிரியாது,தேர்தலில் அமமுக பெரிய அளவில் எதுவும் செய்யாது என்ற சந்தோஷத்தில் அதிமுக இருக்கிறது. அதே சமயம் சசிகலா எடுத்த முடிவை அதிமுக கட்சிக்கு உள்ளே பலர் மனரீதியாக பாராட்டி உள்ளனராம். சசிகலா மிகவும் துணிச்சலான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிமுக தரப்பில் சிலர் கருதுவதாக தகவல்கள் வருகிறது.

அதிமுக நலன்

அதிமுக நலன்

தன்னை பற்றி நினைக்காமல் அதிமுகவை பற்றி சசிகலா நினைத்துள்ளார் . தன்னை விட அதிமுகவின் வெற்றி, எதிர்காலம் முக்கியம் என்று அவர் நினைக்கிறார். வாக்கை பிரிக்கும் எண்ணம் அவருக்கு இல்லை என்று அதிமுகவிற்குள் பலர் சசிகலாவின் முடிவை பாராட்டி உள்ளனர். சசிகலா மீது இதனால் அதிமுகவிற்கு சாப்ட் கார்னர் உருவாகி உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

விரைவில்

விரைவில்

இதனால் விரைவில் சசிகலாவுக்கு ஒரு குட்நியூஸ் செல்லும் என்று தகவல்கள் வருகிறது. அதிமுக தரப்பில் இருந்து சசிகலாவிற்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று செல்ல வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இது பெரிய மாற்றமாக இருக்கும் என்றும் பேசிக்கொள்கிறார்கள். இந்த தகவல் இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் நடந்து வருகிறது என்கிறார்கள்.

அதிமுக விருப்பம்

அதிமுக விருப்பம்

சசிகலா மீது அதிமுக தரப்புக்கு இப்போது எந்த அதிர்ச்சியும் இல்லை. முதல்வரும், துணை முதல்வரும் சசிகலாவை தாக்கி பேசவில்லை. சசிகலாவும் அரசை குற்றஞ்சாட்டவில்லை. மாறாக அதிமுகவின் பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையில் சமாதானம் ஏற்பட்டு... முக்கியமான திருப்பங்கள் அரங்கேறும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+