ரூ.16 லட்சம் போச்சே.. ஆன்லைன் ரம்மியால் அடுத்த பலி.. மெரினா கடலில் குதித்து சென்னை நபர் தற்கொலை!
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
சென்னை: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழக்கும் பலர் தற்கொலை செய்து வருகின்றனர். நேற்று கூட சென்னையை சேர்ந்த தனியார் மருந்து பிரதிநிதி தற்கொலை செய்த நிலையில் தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சம் இழந்த நபர் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் தான் அவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பலபேர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு பணம் இழக்கும் நபர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
இந்த வகையான தற்கொலைகள் தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தற்போது வரை 40க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

ஒப்புதல் அளிக்காத ஆளுநர்
இதனால் தான் தமிழ்நாடு அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா கொண்டு வரப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்னும் அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டு பயன்பாட்டில் உள்ளது.

ஆன்லைன் ரம்மியில் சென்னை நபர்
இதனால் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிலையில் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயமாகி உள்ளார். அதாது சென்னை கேகே நகரில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர் அந்த விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கடிதம் எழுதிவிட்டு மாயம்
ஆனாலும் கூட அவர் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதன்மூலம் அவர் ஏராளமான பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுரேஷ் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார். அவரை குடும்பத்தினர் தேடிய நிலையில் அவர் கிடைக்கவில்லை. மாறாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

ரூ.16 லட்சம் இழப்பு என தகவல்
அதில் ஆன்லைன் ரம்மியில் ரூ.16 லட்சத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளப்பபோவதாக எழுதி வைத்திருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீஸ் நிலையம் சென்றனர். சுரேஷின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் தற்போது அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் தான் அவர் சென்னை மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அவரது உடல் மீட்கப்பட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
முன்னதாக சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத் குமார் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தார். இவர் ஆன்லைன் கடன் செயலியில் ரூ.20 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் பறிகொடுத்த நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இன்று சென்னையை சேர்ந்த மற்றொருவர் தற்கொலை செய்துள்ளார். இத்தகைய தொடர் தற்கொலைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications