இப்படியா பட்டாசு கொளுத்தறது.. தலைதெறிக்க ஓடிய மக்கள்.. பரபரப்பு வீடியோ
ஆபத்தான முறையில் பட்டாசு கொளுத்திய நபரின் வீடியோ வைரலாகிறது.
சென்னை: பட்டாசு வெடிக்க கொடுத்ததே 2 மணிநேரம்தான். அந்த 2 மணி நேரத்திலும் தினுசு தினுசா பட்டாசு வெடித்து பலர் மக்களை அச்சுறுத்தி உள்ளனர்.
இப்படித்தான் லக்னோவில் சிலர் நான்கைந்து வெடிகளை ஒன்றாக கொளுத்தி போட, அது 3 வயது சிறுமியின் வாய்க்குள் வந்து விழ பிறகு சிறுமிக்கு வாயில் 50 தையல்கள் போடப்பட்டது.

வைரல் வீடியோ
இதேபோல ஒருவர் ஆபத்தான முறையில் பட்டாசை வெடித்துள்ளார். அவர் எந்த ஊர் என தெரியவில்லை. ஆனால் அவர் ஆபத்தான முறையில் வெடித்த வீடியோ மட்டும் வைரலாகி வருகிறது. ரொம்ப ஆசையாக பட்டாசு வெடிக்க ரோட்டுக்கு அவர் வந்தார். ஆனால் கையில் பட்டாசு பட்டாசு... பட்டாசு டப்பாவையே வைத்திருந்தார்.

டப்பா முழுதும் பட்டாசு
அவ்வளவும் புஸ்வாணம் போல வானில் சென்று வெடிக்கும் பட்டாசுகள்தான்!! பெட்டிக்குள் அந்த பட்டாசுகளை வைத்து அப்படியே கொளுத்திவிட்டு தன்னந்தனியாகவே வெடித்து கொண்டிருந்தார். எல்லா புஸ்வாணங்களும் பெட்டிக்குள் இருந்து சிதறி வெடித்து வானில் பறந்தன.

நெருப்புகள் பறந்தன
இதனை சுற்றி நின்று நிறைய பேர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென தன் கையில் கொளுத்தப்பட்டிருந்த பெட்டியை தலைக்கு மேலே பின்பக்கமாக திருப்பி விட்டார். எல்லா பட்டாசுகளும் இப்போது பின் பக்கமாக திரும்பி வெடித்தது. எல்லார் மீதும் நெருப்புகள் அள்ளி தெறித்தன.

கண்டனங்கள்
இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தலை தெறிக்க அலறி அடித்து ஓடினார்கள். தொடர்ந்து பெட்டியில் இருந்த பட்டாசுகள் வெடிக்கவும், ஒரு சிலர் ஓடிச்சென்று அந்த பட்டாசு டப்பாவை வாங்கி கொண்டார்கள். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இளைஞர் செய்த காரியத்தை பலர் கண்டித்து பதிவிட்டும் வருகிறார்கள்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications